குற்றமும் கருணையும் - இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள் - வி.சுதர்ஷன்( தமிழில்: மு.குமரேசன்); பக்.224; ரூ.275; காலச்சுவடு, நாகர்கோவில்-629001; 04652-278525.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அனூப் ஜெய்ஸ்வால், தமிழக காவல் துறையில் பணியாற்றிய போது தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.
மதுரையில் களப் பயிற்சியை நிறைவு செய்த அனூப், அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக பொறுப்பேற்றவுடன் பாப்பாக்குடியில் நிகழ்ந்த ஒரு கொலையில் துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கையை எடுத்தார். அதன் பிறகு மணிமுத்தாறில் புதிதாக உருவாக்கப்பட்ட 9-ஆவது பட்டாலியனுக்கு தலைமையேற்றார்.
அங்கிருந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார். பல வழக்குகள், குற்றச் செயல்கள் குறித்து அனூப்பின் விசாரணை குறிப்புகள் விறுவிறுப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், புன்னக்காயலில் நிகழ்ந்த படுகொலைகள், பாறைப்பட்டி ரௌடி தர்மாவை சுட்டுக்கொன்றது, கள்ளச்சாராய விற்பனையை ஒழித்தது, 80 வயது மூதாட்டிக்கு பென்ஷன் வழங்க ஏற்பாடு செய்தது, மைனர் சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியது ஆகியன குறிப்பிடத்தக்கது.
காவல் அதிகாரிகளிடம் தோழமை உணர்வுடன் பழகும் அனூப், எந்தச் சூழலிலும் தனது சகாக்களை பலிகடா ஆக்காமல் அவர்களைப் பாதுகாக்கிறார். தனது ஒவ்வொரு நடவடிக்கையிலும் குற்றவாளிகளிடமும் சரி, தன்னிடம் புகாரளிக்க வரும் பொதுமக்களிடமும் சரி மனிதாபிமானம், கருணை, பொறுமைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு நேர்மையோடு சட்டத்தை அணுகுகிறார்.
ஐபிஎஸ் பயிற்சியின்போது தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றம் சென்று தனது உரிமையை நிலைநாட்டிய சம்பவமும் நெகிழ வைக்கிறது.
சோதனையில் துவளாமல், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, நேர்மையுடன் பணிபுரியவும், நீதிக்காகப் போராடவும் இந்நூல் வழிகாட்டுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

