சிலம்பில் மணியோசை - ப.முத்துமணி; பக்- 160. ரூ.200. வையைப் பதிப்பகம், தேனி; 98423 70792.
ஐம்பெரும் காப்பியங்களில் முதலாவதாகப் போற்றப்படுவது சிலப்பதிகாரம். கி.பி.முதலாம் நூற்றாண்டு கால மக்களின் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் முறைகளை இக்காலத்தவரும் தெரிந்து கொள்ளும் வகையில் சிலப்பதிகாரத்தில் தோய்ந்து ஆய்வுக் கட்டுரைகளைத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
இசை தொடர்பான கருவிகள், இசைக் கலைஞர்களின் நடன அசைவுகள், அணிகலன்கள் ஆகியவை குறித்துப் பதிவு செய்திருப்பது படிப்போரை ஆச்சரியப்படுத்துகிறது. இத்துடன் கோவலன், மாதவி கூடல் காட்சிகளைச் சொல்லும்போது அவற்றை நம் கண் முன் நிறுத்துகிறார்.
மதுரையைக் காவல் காக்கும் பூதங்களைச் சொல்லுவதுடன் 20-ஆம் நூற்றாண்டின் இயந்திர மனிதனோடு ஒப்பிட்டு சிலம்பில் அறிவியல் பார்வை என புதிய ஆய்வுப் பாதைக்கு வித்திட்டுள்ளார் நூலாசிரியர்.
மதுரை குறித்து நூலாசிரியர் குறிப்பிடும்போது அப்போதைய மதுரை நகருக்குள் நாம் உல்லாச உலா வரும் வகையில் நமது கற்பனை விரிகிறது.
13 கட்டுரைகளின் தொடக்கத்திலும் முடிவிலும் கட்டுரையின் நோக்கம் குறித்து நூலாசிரியர் சமூகம் சார்ந்த கருத்துகளைப் பதிவு செய்துள்ளது பாராட்டத்தக்கது.
சிலப்பதிகாரம் குறித்து எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும் இந்நூல் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாகத் திகழ்கிறது. இந்த நூலின் மூலம் அந்தக் காலத் தமிழர்களின் பெருமையைப் படித்துப் புரிந்து கொள்வதுடன் அதை அனுபவித்து மகிழ வாய்ப்பளித்த நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயா் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

அன்ன காமாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

சந்தானம் நடிக்கும் புதிய படம்!

டாடா இயக்குநர் தயாரிப்பில்..! கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ப்ளடி பாலிடிக்ஸ் பட டீசர்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

