திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

அலெக்சாண்டர் செல்கிர்க்கு

News image
Updated On :9 அக்டோபர் 2023, 12:06 pm

அலெக்சாண்டர் செல்கிர்க்கு - கிருஷ்ணபிரசாத்; பக்.262, ரூ.300; நோஷன்பிரஸ்.காம்.

மனிதச் சிந்தைக்கு அப்பாற்பட்டதாய் விளங்கும் சூழல்களில் மனோதிடத்துடனும் உறுதியுடனும் செயல்படும் மாந்தர்கள் அசாத்திய சாகசங்கள் செய்து சரித்திர நாயகர்களாகத் திகழ்கின்றனர்.  

ஸ்காட்லாண்டில் லார்கோஸ் கடற்கரைக் கிராமத்தில் பிறந்த அலெக்சாண்டர் செல்கிர்க்கு வறுமை காரணமாக பொருள் ஈட்டும் பொருட்டு இளம் பருவத்திலேயே கப்பல் பயணம் மேற்கொண்டு தேர்ந்த மாலுமியாகத் திகழ்கிறார்.  ஒரு பிரயாணத்தின்போது கப்பல் தலைவனுக்கும் செல்கிர்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், யுவான் ஃபெர்னான்டெஸ் என்ற தீவில் இறக்கிவிடப்படுகிறார். அத்தீவில் 4 ஆண்டுகள், 4 மாதங்களை அவர் தனிமையில் கழித்தார்.

அப்போது, உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றுக்காக எதிர்கொண்ட சிரமங்களையும், உடல் - உள ரீதியான சிக்கல்களையும் புத்திசாலித்தனமாக அவர் வென்றதை இந்நூல் சுவைபட விவரிக்கிறது.

முயற்சியும் உழைப்பும் மனித தேவைகளை நிறைவேற்றத் தவறுவதில்லை. தூய மனதுக்கு சக்தி உண்டு. அது அபாயங்களைத் தாண்டி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும். இயற்கையை நாம் நேசித்தால் அது நம்மை அரவணைக்கும் என்பதற்கு சாட்சியாகத் திகழ்கிறார் அலெக்சாண்டர் செல்கிர்க்கு.

வாழ்வில் வெறுப்பு மிகும் போதும், தற்கொலை எண்ணம் மேலோங்கும் போதும், வாழ்க்கையின் மீது சலிப்புத் தோன்றும்போதும், அலெக்சாண்டர் செல்கிர்க்கும், அவர் கூறிய 'இறை யானே யான் காணும் யாவினுக்கும்' என்ற வாக்கியம் நம்பிக்கை ஊட்டுவதாய் அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.