திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

நாட்டுப்புற இராமாயணங்கள்

News image
Updated On :9 அக்டோபர் 2023, 11:59 am

நாட்டுப்புற இராமாயணங்கள் (கம்பன் சொல்லாத கதைகள்) - பேரா. சு.சண்முகசுந்தரம்;  பக்.473; ரூ.500; காவ்யா, சென்னை- 24; ✆ 044- 2372 6882.

ஹிந்துக்களின் இதிகாசமான ராமாயணத்தை அறியாதவர்கள் யாருமில்லை. அதைப் பின்பற்றுவோரும் உண்டு; விமர்சனம் செய்வோரும் உண்டு.  கம்பனும் ராமர் பட்டாபிஷேகத்தோடு ராமாயணத்தைச் சொல்லவில்லை என்ற மனக்குறையும் உண்டு.  ஆனால், பிற மாநிலங்களில், பல மொழிகளில் அதற்கு மேலும் பல கதைகள் உண்டு.
நாட்டுப்புறங்களில் கதைகள்,  பாடல்கள், கதைப் பாடல்கள்,  ஆட்டங்கள்,  கூத்துகள், வழக்காறுகள் வாயிலாக, ராமாயணம் சொல்லப்படும் விதத்தையும்  நூலாசிரியர் ஆய்வு செய்து விவரித்துள்ளது மிகவும் சிறப்பு.

பின்னிணைப்பாக, சீதா கல்யாணம், ராமாயண ஏத்தப்பாட்டு, ஸ்ரீராமர் ஏத்தப்பாட்டு, ராமாயணக் கொம்மிப்பாட்டு, ராமாயண ஓயில் கும்மி போன்றவையும் சேர்க்கப்பட்டுள்ளன. இறுதியில் ஆய்வுக்குப் பயன்பட்ட 56 நூல்களின் விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.  இந்த முயற்சி மேலும் தகவல்களை அறிய விரும்புவோருக்கு பயனுடையதாகவே இருக்கும். தமிழகத்தில் ராமாயணத்துக்குத் தொடர்புடைய இடங்கள் குறித்த விவரங்கள் சிறப்பு.

தசரதனின் சிறப்புகள், ராமன், சீதை, லட்சுமணன்... என கதாபாத்திரங்கள் தொடங்கி, லவ- குசன் வரையில் முழு ராமாயணத்தை  கிராமப்புற மக்களுக்கும் புரியும் வகையில்  நாட்டுப்புற நிகழ்வுகள்  அமையப் பெற்றன என்பதால், இந்த நூல் எளிய நடையிலேயே உள்ளது. ராமாயணத்தைப் புதிய கோணத்தில் அறிய விரும்புவோருக்கு இந்த நூல் வழிகாட்டியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.