பயோ டெக்னாலஜி - உயிர்த் தொழிற்சாலை; பேராசிரியர் க.மணி; பக். 280; ரூ.280; அபயம் பப்ளிஷர்ஸ், கோவை. ✆ 90956 05546.
கண்ணுக்குப் புலப்படாத அணுக்கள், செல்களின் பெருந்திரள்தான் இந்த உடம்பு, உயிர், உலகம் எல்லாமுமே என்பதையும், அதிலிருந்து பரிணமித்த உயிரித் தொழில்நுட்பம் எவ்வாறு உலகை ஆட்டுவிக்கிறது என்பதையும் அறிவியல் பூர்வமாக விளக்கும் நூல் இது.
செல்கள் சங்கமித்து 200 வகையான திசுக்கள் உருவெடுத்து, அதிலிருந்து செயல் மண்டலங்கள் உருவாகி புலன்களும், உயிர்களும் தோற்றுவிக்கப்படுகின்றன என்ற அடிப்படை உண்மையிலிருந்து ஆரம்பிக்கிறார் நூலின் ஆசிரியர்.
பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து சமூகத்துக்கு அறிமுகப்படுத்தியது விஞ்ஞானிகள்தான் எனக் கருதுகிறோம். ஆனால், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே டச்சு நாட்டின் துணி வியாபாரி ஒருவர் பாக்டீரியாக்களை நுண்ணோக்கி மூலம் கண்டிருக்கிறார் என்ற புதிய தகவலை நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ராபர்ட் ஹூக், சார்லஸ் டார்வின், கிரிகர் மெண்டல் போன்ற எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள் நுண்ணுயிரிகளையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் கண்டறிந்தது விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
மரபணுக்களின் தோற்றுவாய், அதன் பரிணாமம் குறித்த தகவல்கள் எளிய நடையில் இருப்பது கூடுதல் சிறப்பு. உயிரித் தொழில்நுட்பம் மருத்துவம், சுற்றுச்சூழல், கடல் சார் பகுதிகளில் எந்த அளவுக்கு தாக்கத்தையும், ஆக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை நூலாசிரியர் வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, உயிரித் தொழில்நுட்பத்தில் நிலவும் காப்புரிமை அரசியலையும், அறத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். எளிய வாசகர்களுக்கு இந்த நூல் சமூக கையேடு. துறை சார்ந்தவர்களுக்கு அன்றாடம் பயன்படக் கூடிய கையேடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


