ஆரிய திராவிட மாயை - டாக்டர் கு.சடகோபன்; பக்.424; ரூ. 460; சுவாசம் பதிப்பகம், சென்னை- 127: ✆ 81480 66645.
சமூக, அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட முக்கியமான கருத்தியல், வெளிநாட்டு அறிஞர்கள் சிலரால் முன்வைக்கப்பட்ட ஆரிய- திராவிட இன வரைவுக் கொள்கை எனில் மிகையில்லை. 'ஆரிய இனம் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தது; தென் இந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களை அடக்கி ஆண்டது' என்பதே இந்தக் கருத்தியலின் வேராகும். இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளார் அம்பேத்கர். இதுபோன்ற வரலாற்று ஆதாரங்களுடன் நூலாசிரியர் எழுதி இருக்கிறார்.
காமராஜர், ம.பொ.சி., பெரியார் ஈ.வெ.ரா., கி.வா.ஜகந்நாதன் போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நூலாசிரியரால், திராவிடக் கருத்தியலும் தமிழக அரசியலும்
எவ்வாறு இரட்டைத் தண்டவாளங்களாக மாறின என்பதை சுவாரசியமாக விளக்க முடிந்திருக்கிறது.
ஆரியக் கோட்பாட்டுக்குக் காரணமான மாக்ஸ்முல்லர், திராவிட இனக் கருத்தியலின் தோற்றுவாயான கால்டுவெல், பிராமண வெறுப்பைக் கொண்டு திராவிட இயக்கம் வளர்ந்த வரலாறு, அதற்குள் ஏற்பட்ட பிரிவினைகள், அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட பல விவரங்களை தக்க தரவுகளுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
'ஆரியர், திராவிடம் ஆகிய இரண்டுமே சம்ஸ்கிருதச் சொற்கள். இவை தவறான பொருளில் இனப்பெயராகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன' என்பதே இந்நூலின் பிரதான கருத்து. மொழியியல், இன வரைவியல், மானுடவியல், அரசியல், ஆன்மிகம், தத்துவம், வரலாறு எனப் பல துறை சார்ந்த ஆதாரங்களுடன் ஆரிய- திராவிட இனவாதக் கோட்பாட்டை நிராகரிக்கும் நூலாசிரியர், அதற்கு ஆதரவாக விவேகானந்தர், பாரதியார், திரு.வி.க., ம.பொ.சி., உள்ளிட்டோரின் கருத்துகளைத் தொகுத்திருக்கிறார். இயல்பான பேச்சு வழக்கிலான எழுத்துநடை படிக்க எளிதாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

