உச்சம் தொடு - திறனில் தொழிலில் வாழ்வில் - சோம. வள்ளியப்பன்; பக்.160; ரூ.190; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-4200-9603.
போட்டி நிறைந்த உலகில் ஒருவர் வெற்றி பெறத் தேவைப்படும் குணங்கள் என வெளிப்படையாகத் தெரியும். பலவற்றை விடக் கூடுதலாக நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. பாரதியார் முதல் புளூ டயமண்ட் திரையரங்கம் வரை பல்வேறு வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள தனித்துவங்களை இங்கு பட்டியலிடுகிறார் ஆசிரியர்.
இருப்பது போதும் என்ற மனநிலை எப்போதும் ஏற்படாத பலரின் வெற்றி சுவடுகளையும் அவர்களின் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள தனித்துவத்தையும், எளிமையாக கூறியுள்ளார்.
உதாரணத்துக்கு கிரேக்கத்தில் 'பிக்மேலியன் எபெக்ட்' தத்துவத்தில் நம்மை பற்றி எப்படி நினைக்கிறோமோ அதற்கு ஏற்பவே நாம் நடந்து கொள்வோம்; மற்றவர்களாலும் அப்படியே நடத்தப்படுவோம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற கவனத்தில் கொள்ள வேண்டிய பல தத்துவார்த்த விளக்கங்களை இந்நூலில் காணலாம்.
உச்சம் தொட்ட மனிதரெல்லாம் திடீரெனப் பறந்துவிடவில்லை. மற்றவர் உறங்கும் இரவுகளில் கூட உழைத்ததாலேயே உயர்ந்தனர். எண்ணங்கள், முயற்சிகள் மூலம் சாதனையை அடைய வறுமை ஒரு தடையல்ல என்பதை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை. பதிவாளர் கு.சின்னப்பன் கதை மூலமும், ஒரு விஷயத்தை எப்படியும் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் தாகம் அவரை உச்சத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்பதை இயக்குநர் டி.ராஜேந்தர் மூலமும் அறியலாம். தனித்துவமான குணங்கள் மூலம் வெற்றியை எல்லோரும் அடைவது சாத்தியமானது தானா என பலருக்கு சந்தேகம் தோன்றும். அதை உடைத்து ஒவ்வொருவரின் தனித்தவத்தை வெளிக்கொணர இந்நூல் பெரிதும் உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

