'தராக்கி' ஈழத் தமிழ் ஊடக முன்னோடி - தொகுப்பாசிரியர்கள்: சண் தவராஜா, இ.தேவஅதிரன்; பக்.400; சிவராம் ஞாபகார்த்த மன்றம், சுவிஸ் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், இலங்கை.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் அந்த நாட்டு மூத்த ஊடகவியலாளரான டி.சிவராம் என்கிற தராக்கி தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு 'காலத்தின் தேவை அரசியல் வேலை' என்ற நூலாக 2013-இல் வெளிவந்தது. அவர் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ் அரசியல் ஆளுமைகளுக்கும் கூறி வந்த ஆலோசனைகள் ஏராளம். விடுதலைப் புலிகளின் ஊடகத்திலும் அவருடைய பணி அளப்பரியது. அவர் 2005-ஆம் மரணம் அடைந்தார்.
இப்படிப்பட்டவரின் சிறப்புகள் குறித்து அவருடன் பணியாற்றியவர்கள், பழகிய ஆளுமைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதிய 41 கட்டுரைகளின் தொகுப்பாக. 'தராக்கி- ஈழத் தமிழ் ஊடக முன்னோடி' என்ற பெயரில் இந்த நூல் வெளிவந்திருக்கிறது.
'ஒரு ஊடகவியலாளர் இப்படி இருந்திருக்க முடியுமா?' என்று வியக்கும் அளவுக்கு அவரது கட்டுரைகளில் ஆலோசனைகள், அறிவுரைகள், செயல்பாடுகள், நுணுக்கங்கள், பலம், தியாகம், தீர்க்க தரிசனம், கற்க வேண்டியவை.. என்று
பன்முக ஆளுமைத்திறன் வெளிப்படுகிறது.
தனது எழுத்துகள் வாயிலாக, இலங்கைத் தமிழர்கள், போராளிக் குழுக்கள், இலங்கை அரசு.. என அறிவுறுத்தல்களைப் படிக்கும்போது, பிரச்னை தீர என்றோ வழிகாட்டல்கள் இருந்திருக்கின்றன என்பதை உணர முடிகிறது.
இலங்கைத் தமிழ் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பேல்பூரி
காஞ்சியும் உடையார்பாளையமும்

இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் இசையமைப்பாளரான அனிருத்!

பி. எஸ். வீரப்பா - நான் சந்தித்த பிரபலங்கள் - 48
வீடியோக்கள்
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

