தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

காளமேகம் பாடல்கள்

முழு​வ​து​மா​கப் படித்து முடிக்​கும்​போது நமக்கு மொழிச் செருக்கு ஏற்​பட்​டு​வி​டும் என்​பது மட்டும் உறுதி.

News image
Updated On :23 ஏப்ரல் 2025, 1:58 pm

DIN

காளமேகம் பாடல்கள் - புலியூர்க் கேசிகன்; பக்.176; ரூ. 220; சொர்ணவள்ளி பிரசுரம், சென்னை-33; ✆ 90948 75747.

காளமேகத்தின் இயற்பெயரிலிருந்து ஆரம்பித்து அவரது வாழ்க்கைப் பதிவுகளை நமக்கு ஓர் கதை போல் சுருக்கமாகத் தருகிறது இந்நூல். காளமேகத்தின் காதல், காதலால் அவர் செய்யும் புரட்சி, அதன் பின்பான அவரது கவிப்பயணம், சென்ற இடங்களில் அவர் பெற்ற அனுபவங்கள், அதனால் விளைந்த கவிகள் என நாமும் அவருடன் பயணித்தது போல் இருக்கிறது.

ஒரு செய்யுளில் பஞ்சம் ஏற்படுவதும், ஒரு வார்த்தையில் சினம் கொண்ட சிவனைத் தன்வயப்படுத்துதலும் தமிழால் மட்டுமே முடியும் என அந்தச் செய்யுள்களை நம்மை வாசிக்க வைத்து, அதற்கான விளக்கமும் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது.

காளமேகத்தின் மேதமையாக அறியப்படும் சிலேடைப் பாடல்களோ, வித்தாரச் செய்யுள்களோ ஆசிரியர் தேர்ந்தெடுத்து தெளிவுரை தந்திருக்கும் பாடல்களோ நமக்குக் கொஞ்சமும் சலிப்பைத் தராமல் மேலும் மேலும் வாசிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன.

மேலும் இந்நூலில் கடவுளைப் பற்றிய பாடல்களில் காளமேகம் அந்தக் கடவுள் மேல் கொள்ளும் உரிமை எத்தகையது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தனிப்பா​டல்​க​ளாக இந்​நூ​லில் இடம்​பெற்​றுள்ள காள​மே​கத்​தின் பாடல்​கள் இன்​னும் சுவா​ரஸ்​ய​மா​னவை. இந்​நூ​லி​னால் நமக்​குப் புரி​வது இது தான்: அது, தமிழ் என்​னும் தெய்​வ​மொ​ழி​யால் தெய்​வத்தை இகழ்​வது போல்

புக​ழ​வும், செருக்​குற்​றோரை புகழ்​வது போல் இக​ழ​வும் முடி​யும் என்​ப​து​தான். முழு​வ​து​மா​கப் படித்து முடிக்​கும்​போது நமக்கு மொழிச் செருக்கு ஏற்​பட்​டு​வி​டும் என்​பது மட்டும் உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.