தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பிரதாப் நாமா

பாரதத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

News image
Updated On :23 ஏப்ரல் 2025, 1:56 pm

DIN

பிரதாப் நாமா; சக்திவேல் ராஜகுமார்; பக். 112; ரூ.150; சுவாசம் பதிப்பகம்; சென்னை-27. ✆ 81480 66645.

மொகலாய மன்னர் அக்பரை எதிர்த்து வீரப்போர் புரிந்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த மேவார் மன்னர் ராணா பிரதாப்பின் வாழ்க்கை வரலாறே இந்நூல்.

அக்பரின் பெரும் படைக்கு எதிராக ஹால்டிகாட் என்ற இடத்தில் நடந்த போர் ராஜபுத்திர வீரர்களின் தீரத்தை உலகுக்குப் பறைசாற்றிய முக்கியமான போராகும். "சேத்தக்' என்ற குதிரை மீது அமர்ந்து ராணா பிரதாப் புரிந்த சாகசங்களைப் படிக்கும்போது மெய்சிலிர்க்கிறது. ஹால்டிகாட் போரில் இரு தரப்பிலும் பெரும் சேதம் ஏற்பட்டாலும், ராணாவின் வீரத்தை அக்பர் போர்க்களத்திலேயே புரிந்துகொள்ளும் வாய்ப்பை அது ஏற்படுத்தியது என வரலாற்றுத் தகவல்களுடன் கூறுகிறார் நூலாசிரியர்.

ராணா பிரதாப்பின் தந்தை உதய் சிங்கும் மாவீரர். சித்தூர் கோட்டையைக் காக்க அக்பரின் மொகலாயப் படைக்கு எதிராக உதய் சிங் நடத்திய போரும் வீர சரித்திரத்தில் இடம்பெற உரித்தானது. கோட்டையை மொகலாயப் படை நெருங்கும் முன் முதலில் உதய் சிங்கின் காதலி தலைமையில் வந்த ஒரு சிறிய படை, மொகலாயர்களின் முன்னணிப் படையை துவம்சம் செய்தது. அந்த அதிரடிப் படை தற்கொலைப் படை என்று அறிந்து அக்பர் அதிர்ந்துபோனார் என்பது முக்கியமான தகவல்.

அக்பருக்கு எதிரான போரின்போது சில ராஜதந்திர நடவடிக்கைகளுக்காக ராணா தனது இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதாயிற்று. அந்த வேளையில் அரண்மனை இல்லாமல், தலைநகர் இல்லாமல் இருந்த ஓர் அரசரிடம் மக்கள் வரிகட்டிய அதிசயத்தை ராணா பிரதாப் நடத்திக் காட்டினார்.

தனது இறுதிக் காலம் வரை எதிரியிடம் அடிபணியாத ராணா பிரதாப், வீரத்துக்காக மட்டுமன்றி பிறந்த மண்ணையும், பின்பற்றிய சமயத்தையும் இரண்டு கண்களாகக் கருதியவர். பாரதத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.