கோஹினூர்

பல நூற்றாண்டுகள் கடந்தும் அவ்வைரத்தின் புகழ் வெளிச்சம் இன்னும் மங்கவில்லை.
கோஹினூர்
Updated on
2 min read

கோஹினூர் - உலகின் புகழ்பெற்ற வைரத்தின் கதை; ராம் அப்பண்ணசாமி; பக்.152; ரூ.180; கிழக்குப் பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-4200 9603

உலகப் புகழ்பெற்ற பொக்கிஷங்களுள் கோஹினூர் வைரம் முதன்மையானது என்று கூறலாம். அதனால்தான், அன்றுமுதல் இன்று வரை அது அதிகாரத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. சாமானியர் முதல் பேரரசர்கள் வரை எத்தனையோ பேர் கோஹினூர் வைரத்தைக் கைப்பற்றப் போராடியுள்ளனர். தன்னைக் கைப்பற்றியவர் வீழ்ச்சியடைந்த பிறகே, அடுத்தவர் கைக்கு தொடர் ஓட்டம்போல மாறியுள்ளது கோஹினூர் வைரம்.

அதனால்தானோ, என்னவோ 70 ஆண்டுகளாக அரியணையில் அமர்ந்திருந்தும், 2022-இல் தான் மரணிக்கும் வரையில் கோஹினூர் வைரத்தை அணிந்துகொள்ளும் துணிவு ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வரவில்லை போலும். அவரையொட்டி இளவரசி கமீலாவும் அவ்வைரத்தை அணியாததில் வியப்பொன்றும் இல்லை.

முகலாயர், சீக்கியர் என சாம்ராஜ்யம் விட்டு சாம்ராஜ்யம், இந்தியா, ஆப்கானிஸ்தான் என நாடு விட்டு நாடு என்று கைமாறிய கோஹினூர் வைரம் நிறைவாக இங்கிலாந்து அரச குடும்பத்தின் சொத்தாக மாறிப் போனது.

கோஹினூர் வைரத்தின் தொடக்ககாலம் தொட்டு லண்டன் சென்றடைந்தது வரையிலான அத்தனை நிகழ்வுகளையும் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் 28 அத்தியாயங்களில் இந்நூல் விவரிக்கிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையில் இங்கிலாந்திடம் கேள்வி கேட்கவும், திரும்பப் பெறவும் எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும் கோஹினூர் வைரம் அதில் முதலிடம் வகிக்கிறது. அதனால்தான் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவ்வைரத்தின் புகழ் வெளிச்சம் இன்னும் மங்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com