சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

ஆதித்த கரிகாலன்

சோழ மன்னன் ஆதித்த கரிகாலனின் படுகொலை குறித்துப் பல்வேறு கல்வெட்டுகள் கூறும் தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 12:12 pm

ஆதித்த கரிகாலன் - மறைக்கப்பட்ட வரலாற்று படுகொலை; ஜெகாதா; பக்.228; ரூ.230; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை- 600017, ✆ 044-2433 1510.

சோழ மன்னன் ஆதித்த கரிகாலனின் படுகொலை குறித்துப் பல்வேறு கல்வெட்டுகள் கூறும் தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் கரி காலனைக் கொன்றது யாராக இருக்கக் கூடும் என்று பலவாறு ஊகிக்கும் தகவல்களாக உள்ளன. பல இடங்களில் பொன்னியின் செல்வன் நாவலின் பகுதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

கரிகாலனின் தங்கையான மந்தாகினி என்ற குந்தவையின் வாழ்க்கை பெருமதிப்புக்குரியதாக உள்ளது. பிறப்பாலும் வளர்ப்பாலும் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் என்றாலும், நிஜ வாழ்வில் அவர் ஓர் ஆணைப் போல ராஜதந்திரியாக, நுட்பம் மிகுந்த மதியூக மந்திரியாக செயல்பட வேண்டி இருந்ததே அந்த மதிப்புக்குக் காரணம். அவர் பிற அரச மகளிரைப் போல் அல்லாமல், அந்தக் காலத்திலேயே சோழப் பேரரசின் ஆட்சியிலும் பங்குகொண்டு பல்வேறு செயல்களில் ஈடுபட்டதன்மூலம், நிகழ்கால, வருங்கால பெண்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பார் எனக் கருதலாம்.

கரிகாலனைக் கொன்றது யார் என்பது மேலும் ஆயிரம் ஆண்டுகளானாலும் விடை தெரியாத கேள்வியாகத்தான் நீடிக்கும் என்பது போலவே தெரிகிறது. புதிதாக கல்வெட்டு ஏதேனும் கிடைத்து, அதன்மூலம் உறுதியான தகவல் கிடைக்காதவரை, அது மர்மமாகவே நீடிக்கும்.

கரிகாலனின் மரணத்தைத் தொடர்ந்து, முதலாம் ராஜராஜ சோழன் உள்பட 5 சோழப் பேரரசர்கள், தங்கள் வாரிசுகளைத் தேர்ந்தெடுத்து இளவரசு பட்டம் சூட்டிய குறுகிய காலத்திலியே இறந்திருப்பது, கரிகாலனின் மரணத்தில் மட்டுமின்றி சோழ வம்சத்திலேயே மர்மங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.