தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

இந்திய இலக்கியச் சிற்பிகள்

தமிழண்ணலின் புலமை, தமிழ் மேம்பாட்டுணர்வு, சீரிய தமிழ்ப்பணி இச்சிறு நூலில் திறம்படத் தொகுக்கப்பட்டுள்ளன.

Published On :

இந்திய இலக்கியச் சிற்பிகள் - 'தமிழண்ணல்' இராம. பெரியகருப்பன்: ம.திருமலை; பக்.128; ரூ.100; சாகித்திய அகாதெமி, 443 அண்ணா சாலை,  சென்னை 600 018.

இருபதாம் நூற்றாண்டு தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வு ஊக்கம் பெற்று, உரைகளும் எழுத்துகளும் பரவலாக வெளிவந்த காலம். அத்தகைய காலச் சூழலில் தமிழண்ணல் போன்றவர் தோன்றுவது காலத்தின் தேவையாக இருந்தது.

வறுமைச் சூழலில் அவரது இளமை கழிந்தாலும் ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கு வறுமை தடையல்ல என்பதை உழைப்பால் நிரூபித்துக் காட்டியவர். சுதந்திர காலத்துக்கு முன்பான கொழும்பில் வேலை பார்க்கச் சென்ற அவர், அந்தப் பகுதியில் வெளியான வீரகேசரி இதழில் கவிதைகள் எழுதினார். பின்னர், தமிழகம் திரும்பிய அவர் வித்துவான் பட்டப் படிப்பை நிறைவு செய்தார். பள்ளி ஆசிரியர், பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் என படிப்படியாக முன்னேறினார்.

ஒப்பிலக்கியத் துறையின் கோட்பாடுகளையும் ஆய்வுப் பரப்பையும் குறித்து தமிழண்ணல் எழுதி வெளியிட்ட 'ஒப்பிலக்கிய அறிமுகம்' என்ற புத்தகம் ஒப்பிலக்கிய கல்வியின் தேவைகளை நிறைவு செய்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.1973-இல் வெளியாகி அரை நூற்றாண்டு கடந்தும் இந்த நூல் கல்விப் புலத்தில் நிலைபெற்று நிற்பது அதன் சிறப்புக்குச் சான்று.

தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்ய உதவும் திறனாய்வு அளவுகோல்கள் குறித்த முன்னோடி நூல்களை தொல்காப்பியத்தின் துணைகொண்டு எழுதி வெளியிட்டார். நாட்டுப்புறவியல் ஆய்வுகளிலும் சிறந்த பங்களிப்பைச் செய்தார்.  நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களுக்கு உரை எழுதி வெளியிட்டுள்ளார்.

படைப்பிலக்கியத்திலும் கவனம் செலுத்தியுள்ள தமிழண்ணல், ஒரு சமூகத்தின் பழக்க வழக்கங்களை எடுத்துக்காட்டி விமர்சிக்கும் நாவலாக 'வாழ்வரசி' என்ற படைப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழண்ணலின் புலமை, தமிழ் மேம்பாட்டுணர்வு, சீரிய தமிழ்ப்பணி இச்சிறு நூலில் திறம்படத் தொகுக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.