திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டு

வாழ்வின் ஒளி வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் புகழ் போற்றும் கட்டுரைகளின் தொகுப்பாக, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் வெளிவந்துள்ளது இந்த நூல்.

Updated On :

வாழ்வின் ஒளி வள்ளலார் - பதிப்பாசிரியர்: பேராசிரியர் கி. ஈஸ்வரி; பக்.256; ரூ.300; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 21. ✆ 93805 30884.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் புகழ் போற்றும் கட்டுரைகளின் தொகுப்பாக, அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் வெளிவந்துள்ளது இந்த நூல்.

வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, வாழ்வியல், கோட்பாடுகள், அருட்தன்மை, பன்முக ஆற்றல் ஆகியன இந்த நூலில் வெவ்வேறு பார்வையில் எடுத்தியம்பப்பட்டுள்ளன.

மக்கள் கொள்கைப் பசியுடன் இருக்க வேண்டும்; நல்லொழுக்கம், கருணை, ஆன்ம நேய ஒருமைப்பாட்டுடன் கூடிய தனித் தன்மையுடன் வாழ வேண்டும்; நம்மை நாமே வெல்லும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை 'பசித்திரு- தனித்திரு- விழித்திரு' என வள்ளலார் அருளிச் செய்ததையும், மதமும், ஜாதியும் மனித சமூகத்தின் எதிரிகள்,

இறைவன் முன் அனைவரும் ஒன்றே என்ற நெறியை அவர் வகுத்தளித்ததும் இந்த நூலில் கட்டுரையாளர்களால் விளக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர்- வள்ளலார், திருமூலர்- வள்ளலார் ஒப்பீடுகள் நல்லதொரு ஆய்வு. வள்ளலாரின் ஆன்மிகப் பயணம், சமூக சீர்த்திருத்தம், சமய ஒற்றுமை, ஒளி வழிபாடு, அவர் கண்ட பொதுநெறி என வள்ளலாரின் பன்மைத்துவத்தை விளக்கும் கட்டுரைகள் சிறப்பு.

வறுமையைப் போக்க வழிதேடி சத்திய தர்மச் சாலையை வள்ளலார் நிறுவியது, மார்க்க நெறிக்காக சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவியது, அவரது தமிழ்ப் பணி, மக்கள் பணி, சன்மார்க்க பணி என அனைத்து அருள்பணிகள், அவரது இறுதிக் காலம் உள்ளிட்டவை 36 கட்டுரையாளர்களால் விளக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.