தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

தொடுவானம்

ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நகரும் இந்நாவல், வாசகர்களுக்கு நிறைவைத் தரும்.

Published On :

தொடுவானம்-அபிமானி; பக்.256; ரூ.390; ஸ்நேகா பதிப்பகம், சென்னை- 600 063. ✆ 98409 69757.

கணவரை இழந்த நிலையில் சமூக நெருக்கடிகள், மனித வக்கிரங்களுக்கு மத்தியில் தனது உறுதிப்பாட்டால் உயர்ந்து நிற்கும் சராசரிப் பெண்ணின் தலைநிமிர் வாழ்வைக் கூறுகிறது இந்த நாவல்.

துறைமுகத்தில் நேர்மையுடன் பணியாற்றிய கணவர் அன்பரசனின் திடீர் மரணத்துக்குப் பிறகு, கருணை அடிப்படையில் இளநிலை எழுத்தர் பணியில் சேருகிறார் புவனா.

'அண்ணன்' இடத்தில் வைத்து பாவித்து வந்த கணவரின் நண்பர், அலுவலக மின் தூக்கியில் தன்னிடம் வக்கிர எண்ணத்துடன் நடந்த விதம் கண்டு அதிர்ந்து விடுகிறார்.

கணவரை இழந்து பணிக்குச் செல்லும் இத்தகைய பெண்கள் மீதான 'வேட்டைப் பார்வை' பொது சமூகத்தில் குறைந்துவிடவில்லை. இவர்கள் மதிப்புடனும், கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தக் கதையில் சமரசமின்றி உணர்த்துகிறார் நாவலாசிரியர்.

புவனா கதாபாத்திரம் காத்திரமான படைப்பு. பணியிடத்திலும், குடும்பத்திலும் அவரது தார்மிக பொறுப்பு மிளிர்கிறது. மறு திருமணம் குறித்த பேச்சு எழும்போது, 'திருமணம் என்பது விருப்பம் சார்ந்தது. கணவருடனான ஐந்தாண்டு வாழ்வே ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருப்தியை தரும்போது, பாதுகாப்புக்கு இரு மகன்கள் இருக்கும்போது இரண்டாம் திருமணம் அவசியமில்லை' என்று புவனா உறுதிபட மறுக்கும்போது அவரது வாதம் கவனம் பெறுகிறது.

அதேபோல, மனைவியை சக ஜீவியாக மதித்து நடத்தும் அன்பரசன், புவனாவின் நண்பனாக வரும் தியாகராஜன் போன்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. குறிப்பாக, அநீதியைக் கண்டு கொதிக்கும் அன்பரசன், 'களத்தில் ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது; பெண்களும் தவறுகளை துணிந்து தட்டிக்கேட்க வேண்டும்' என மனைவியின் தங்கைகளுக்கு தைரியமூட்டுவது சிறப்பு,

தொடக்கத்தில் மின்தூக்கியில் தனக்கு நேரிட்ட கசப்பான சம்பவத்தால் குறுகிப்போகும் புவனா, இறுதியில் அதே மின் தூக்கியை விடுத்து, படிக்கட்டில் மிடுக்குடன் நடைபோடுவதாக கதையை நிறைவு செய்திருப்பது நாவலாசிரியரின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக நகரும் இந்நாவல், வாசகர்களுக்கு நிறைவைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.