
அன்பும் ஆளுமையும்
கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற ஒரே பெண் ஐ.ஏ.எஸ். அலுவலரான நூலாசிரியரின் பணி அனுபவங்கள் இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அற்புதமாக எழுதப்பட்ட நூலும் கூட!

அன்பும் ஆளுமையும்- பா.ஜோதி நிர்மலாசாமி; பக். 224; ரூ. 950; வானதி பதிப்பகம், சென்னை- 600 017. ✆ 044- 2434 2810.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து பெற்றோர் வழங்கிய கல்வியின் பயனாய் ஐ.ஏ.எஸ். அலுவலரான நூலாசிரியர் ஜோதி நிர்மலாசாமி அன்பையும் ஆளுமையையும் துணை கொண்டு, அதிகாரப் பதவியில் அமர்ந்து நேர்மையுடன் சாமானியர்களுக்கு உதவி, ஓய்வு பெற்றும் மாநிலத் தேர்தல் ஆணையராக அந்தப் பதவிக்குப் பெருமை சேர்ப்பவர். இவர் தனது பணிக்காலத்தில் எதிர்கொண்ட அனுபவங்களை 'பாரதி அமலா' எனும் நாயகியின் சித்தரிப்பாக 25 சிறுகதைகளாக்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் கோட்டாட்சியராக, மாவட்ட வருவாய் அலுவலராக, ஆட்சியராக மணல் கடத்தல், அரிசி கடத்தல், சாராய வேட்டை, ஆக்கிரமிப்புகள் அகற்றம், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாத்தல்.. என்று பல்வேறு பிரச்னைகளை அவர் எதிர்கொண்டதைப் படிக்கும்போது, ஆணுக்கு நிகராக அல்ல; அதைவிட அதிகமாகவே பெண் அலுவலராகச் செயலாற்றியுள்ளார் என்பது தெரிகிறது.
அரசியல் பரிந்துரைகளுக்கு வளையாமல் நேர்மையாக அங்கன்வாடிப் பணியாளர்களை நியமித்த விதம், தனியார் மதுக் கடைகள் ஏலத்தை சுமுகமாக நடத்தி அரசுக்கு அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்தது, நாட்டின் முதல் முறையாக சிறைக்குள்ளே கைதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணை அலுவலராகச் செயல்பட்டது, மதப் பூசல்கள் ஏற்படாமல் பல பிரச்னைகளைச் சாதுர்யமாகக் கையாண்டது, நில அபகரிப்பைத் தடுத்தது, மீனவர்களுக்கு இடையேயான மோதல்கள் உள்ளிட்ட பிரச்னைகளில் அவர் கையாண்ட விதம் வியப்பை அளிக்கிறது.
கல்பனா சாவ்லா விருதைப் பெற்ற ஒரே பெண் ஐ.ஏ.எஸ். அலுவலரான நூலாசிரியரின் பணி அனுபவங்கள் இளம்தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அற்புதமாக எழுதப்பட்ட நூலும் கூட!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





