
டாக்டர் வள்ளுவர்
திருக்குறள் உலகப் பொது மறை என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால், உலகின் முதல் மருத்துவர் வள்ளுவர் என்பதை சான்றுரைத் திருக்கிறது இந்நூல்.

டாக்டர் வள்ளுவர்- டாக்டர் எஸ். முருகுசுந்தரம்; பக்.156; ரூ.200; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை - 600 078; ✆ 87545 07070.
திருக்குறள் உலகப் பொது மறை என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால், உலகின் முதல் மருத்துவர் வள்ளுவர் என்பதை சான்றுரைத் திருக்கிறது இந்நூல்.
திருக்குறளை முற்றிலும் மருத்துவக் கண்ணோட்டத்தில் அணுகி 50 குறள்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கவுரையை தந்திருக்கிறார் நூலாசிரியர். நன்னெறி போதனைகளுக்காக மட்டுமே பெரும்பாலும் எடுத்தாளப்பட்ட திருக்குறளை நலம் காக்கும் நூலாகவும் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
ஆரோக்கியம் குறித்து 'மருந்து' என்ற ஒரே ஓர் அதிகாரத்தின் கீழ் 10 குறள்களை மட்டுமே வள்ளுவர் எழுதியிருக்கிறார் என்ற பொதுக் கருத்தை தகர்க்கிறது இந்நூல். வள்ளுவரின் எழுத்தில் எங்கெங்கெல்லாம் ஆரோக்கியத்துக்கான அறிவுரைகள் மறைந்திருக்கிறதோ அவை அனைத்தும் தேடி எடுக்கப்பட்டு புதியதொரு விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
வெறும் உடல் நலனைப் பேணும் குறள்களை விளக்குவதுடன் நில்லாமல், மனதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் வள்ளுவரின் மொழியில் வழிகாட்டியிருப்பது நூலை முழுமை பெற வைக்கிறது.
அடிப்படையில் தோல் மருத்துவரான நூலாசிரியர் குறள் வழியே மருத்துவத்தைக் கண்டடைந்திருக்கிறார். மனதில் தோன்றிய விளக்கத்தை மட்டும் அளிக்காமல் மருத்துவத்தின் வரலாற்றையும் அதனூடே பதிவு செய்திருப்பது சிறப்பு.
21-ஆம் நூற்றாண்டில் இந்த உலகை ஆளும் ஆங்கில மருத்துவத்துக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குள்தான் அரிச்சுவடி என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் டாக்டர் முருகுசுந்தரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






