பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கம்பராமாயணம் - அருங்கவி அமுதம்

பாடல்கள் இன்றைய தமிழ் மாணவர்கள் எளிதில் படிக்கும் விதமாக பதம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

Published On :

கம்பராமாயணம் - அருங்கவி அமுதம்; பேராசிரியர் ப. சுப்பிரமணியன், இரண்டு பாகங்கள்; பக். 1,582; ரூ.1,500; இசையரசி பதிப்பகம், திருவானைக்கா, திருச்சி-5. ✆ 95008 97201.

கம்பனின் ராமகாதை 10,368 விருத்தப்பாக்கள் கொண்டது. இவற்றில் 1,892 செய்யுள்களை மட்டுமே தேர்வு செய்து கம்பனின் கவிச்சுவையை நமக்கு தந்துள்ளார் நூலாசிரியர். கடினமான பணி, இருந்தும் சிறப்புடன் செய்துள்ளார்.

கம்பனின் கவிதைகளில் எதைத் தவிர்க்கலாம் என்பதை தீர்மானிப்பது கடினமான பணி என்று சொல்லக் காரணம்- கம்பனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சில பாடல்கள் மனத்துக்கு உகந்ததாக இருக்கும். வாலி வதை படலத்தில் தாரை புலம்பலில் 10 பாடல்கள் இருக்கும் என்றால், அதில் மூன்றுதான் நூலாசிரியர் கொடுக்கிறார். அதனால் மற்ற பாடல்களில் ஆழ்ந்துபோன வாசகர்களுக்கு இதில் சற்று ஏமாற்றம் ஏற்படும்.

அதே போன்று, சீதை அனுமன் இடையிலான உரையாடல், ராவணனின் அமைச்சரவைக் கூட்டத்தில் கும்பகர்ணன், விபீடணன் வாதம், சீதையை தேடி வரும் ராமனின் பித்துப்பிடித்த மனநிலை, வாலிக்கும் ராமனுக்கும் இடையிலான உரையாடல் என எல்லாவற்றிலும், இந்தப் பாடலும் இடம்பெற்றிருக்கலாமே என்று சொல்லக்கூடியவர்கள் இருப்பார்கள். ஆயினும், மிகச் சிறப்பாகவே இந்த கம்பராமாயண பாடல்களை தெரிவு செய்துள்ளார்.

இவ்வாறு பாடல்களை சுருக்கியதால் ராமாயணத்தின் கதையை சுருக்கிவிடவில்லை. பாடல்களில் இடம்பெறுவதை வசன நடையில் சுருக்கமாக கொடுத்து கம்பராமாயணத்தின் தொடர்ச்சியை பாடல்களுக்கு இடையே பிணைத்துள்ளார்.

இதுதவிர, பாடல்களுக்கு விளக்கவுரை அளிப்பதுடன், அந்த விளக்கத்தின் ஊடாக தமிழ் இலக்கியத்தின் பிறவற்றில் காணப்படும் கருத்துகளையும் சேர்த்து, கம்பனின் கவித்துவத்துக்கு வலு சேர்க்கிறார் நூலாசிரியர். பாடல்கள் இன்றைய தமிழ் மாணவர்கள் எளிதில் படிக்கும் விதமாக பதம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.