பெரம்பலூர் அருகே நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் வேலாயுதம் (59). இவர், நாரணமங்கலத்திலிருந்து ஆலத்தூர் கேட்டுக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, சேலம் மாவட்டம் ஆத்தூரிலிருந்து சென்ற வேன் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து பாடாலூர் போலீஸôர் வழக்குப் பதிந்து, ஆத்தூரை சேர்ந்த வேன் ஓட்டுநர் சக்திவேலை (23) கைது செய்து விசாரிக்கின்றனர்.
பேருந்து மோதி முதியவர் சாவு:
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலத்தை சேர்ந்தவர் வடிவேல் மகன் சுப்ரமணியன் (60). இவர், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை துறைமங்கலம் மூன்று சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

