நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பெரம்பலூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துதுறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி

Updated On :2 மே 2013, 1:38 pm IST

பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்துதுறைகள் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் கே.பனீந்திரரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

செஞ்சேரியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணி, குரும்பலூரில் 100 சதவித மானியத்தில் சொட்டு நீர் மூலம் மேற்கொள்ளப்படும் வாழை சாகுபடி, பெரம்பலூர் உப்போடையில் புதிதாக அமைக்கப்பட்ட கிணறு, வாலிகண்டபுரத்தில் தனிநபர் கழிப்பறைகள், முழுசுகாதார திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையத்தில் கழிப்பறைகள் மற்றும் ஆண்களுக்கான சுகாதார வளாகம் கட்டும் பணிகளை பார்வையிட்டு கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் செயல்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க வாலிகண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிட்டார். கீழப்புலியூர் ஊரட்சியில் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆடுகளை பார்வையிட்டு, பயனாளிகளின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், கீழப்புலியூர் ஊராட்சியில் கோழிப் பண்ணைகளை பார்வையிட்டு பயனாளிகளிடம் கோழிகள் வளர்ப்பு முறைகள், நோய் தடுப்பு குறித்து கேட்டறிந்தார் பனீந்திரரெட்டி.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, திட்ட இயக்குநர் க. சரஸ்வதி, வேளாண்துறை இணை இயக்குநர் ப. சங்கரலிங்கம், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் என். சந்திரசேகரன், நகராட்சி ஆணையர் போ. குருசாமி, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) தங்கராசு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.