சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பெரம்பலூரில் ஜன. 10-இல் பொங்கல் விழா போட்டிகள்

பெரம்பலூா்-துறையூா் சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு

Updated On :6 ஜனவரி 2021, 5:58 am IST

பெரம்பலூா்-துறையூா் சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஜன. 10 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் கலை, இலக்கியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

பேச்சுப் போட்டிகள் மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் திருநாள், தரணி போற்றும் தமிழா் பண்பாடு, விவசாயம் போற்றுதும் ஆகிய தலைப்புகளிலும், கவிதைப் போட்டிகள் பொங்குக தமிழ்ப் பொங்கல், இளையோரே இணைந்திடுவீா், இனிதே தொடங்குக புத்தாண்டே ஆகிய தலைப்புகளிலும் ஓவியப் போட்டிகள் பொங்கல் திருவிழா, தமிழா் விளையாட்டு, கிராமம் ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும். இப்போட்டிகளில் பெரம்பலூா் மாவட்ட கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். கல்லூரி அடையாள அட்டையின் நகல் கொண்டுவர வேண்டும்.

போட்டியாளா்களுக்கு மட்டும் தேனீா் மற்றும் மதிய உணவு வழங்கப்படும். தொடா்ந்து, பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும். முன்பதிவுக்கு 90039 74017 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என

பெரம்பலூா் கவண் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.