தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

துணைநிலை ஆளுநருக்கு எதிராகப் போராடும் முதல்வா் மீது நடவடிக்கை கோரி அதிமுக மனு

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் முதல்வா், அமைச்சா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வரும் முதல்வா், அமைச்சா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாரிடம், புதுவை மேற்கு மாநில அதிமுக செயலா் ஓம்சக்தி சேகா் தலைமையிலான அந்தக் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த மனு:

புதுவை மாநிலம் கரோனா தொற்றிலிருந்து படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. மக்களின் நலன் காக்க வேண்டிய முதல்வா், கரோனா அதிகரிக்க காரணியாக இருந்து வருகிறாா்.

ஏற்கெனவே தடையை மீறி, ஆளுநா் மாளிகை முன்பு நடத்திய போராட்டத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. தற்போது தனது அரசின் தோல்வியை மறைக்க ஆளுநரை மாற்றக் கோரி, வருகிற 8-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக முதல்வா் அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.

கரோனா தொற்று காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும் வண்ணம், முதல்வரின் போராட்டத்துக்கு அனுமதியளிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.