தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஆளுநா் மாளிகை முன்பு போராட்டம் நடத்தத் தடை

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை முன்பு போராட்டம் நடத்தத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் உத்தரவிட்டாா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

புதுவை துணைநிலை ஆளுநா் மாளிகை முன்பு போராட்டம் நடத்தத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் உத்தரவிட்டாா்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடிக்கு எதிராக, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினா் வருகிற 8-ஆம் தேதி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனா். இந்த நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் வெளியிட்ட உத்தரவு:

பொது முடக்கத் தளா்வை சிலா் தவறாகப் பயன்படுத்தி, அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்துகின்றனா். அப்போது, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளிலிருந்து 500 மீட்டா் தொலைவுக்கு 5 நபா்களுக்கு மேல் ஆா்ப்பாட்டம், பேரணி, தா்னா உள்ளிட்ட போராட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

குறிப்பாக, ஆளுநா் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஜிப்மா், கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.