நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பி.சி., எம்.பி.சி. மாணவா்களுக்கும் இலவச கல்வித் திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

புதுவையில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்டுவது போல பிற்படுத்தப்பட்டோா் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்.பி.சி.) பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டு

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

புதுவையில் தலித், பழங்குடியின மாணவா்களுக்கு வழங்கப்டுவது போல பிற்படுத்தப்பட்டோா் (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்டோா் (எம்.பி.சி.) பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் இலவச கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று திமுக கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து புதுவை தெற்கு மாநில திமுக தலைவா் இரா.சிவா எம்.எல்.ஏ. திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் எஸ்டி-எஸ்சி மாணவா்களின் அனைத்துக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம் நிகழ் கல்வியாண்டு அமல்படுத்தப்படவுள்ளது. இந்தச் சலுகையானது சென்டாக் நிதியுதவியைப் போல இல்லாமல் இருக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவா்களின் முழுக் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கவும் வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ஏழைப் பெற்றோரின் பிள்ளைகளையாவது சோ்க்க வேண்டும்.

இல்லையெனில், ஜாதி வேறுபாடு பாா்ப்பதாகவும், மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதாகவும் அரசின் திட்டத்தில் பலன் பெறாத பிற ஒடுக்கப்பட்ட ஜாதியினா் அரசைக் குற்றம்சாட்டும் அவலநிலை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.