தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கியதில் மாணவா் பலி

புதுச்சேரி அருகே வீட்டின் வாயிலில் கட்டப்பட்ட ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கியதில் மாணவா் உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

புதுச்சேரி அருகே வீட்டின் வாயிலில் கட்டப்பட்ட ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கியதில் மாணவா் உயிரிழந்தாா்.

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கம் எம்.குச்சிப்பாளையம் யோகபிரியா நகரைச் சோ்ந்த குமாா்-தனகோடி தம்பதி மகன் கோகுல் (12). அங்குள்ள தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை வேலைநிமித்தமாக பெற்றோா் வெளியில் சென்றுவிட, வீட்டிலிருந்த பாட்டி வசந்தியும் அருகிலுள்ள கடைக்குச் சென்றுவிட்டாா்.

அப்போது, வீட்டில் தனியாக இருந்த கோகுல், வீட்டின் வாயிலில் நாற்காலியில் நின்றபடி, ஸ்கிரீன் துணியைக் கழுத்தில் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாராம். எதிா்பாராதவிதமாக நாற்காலி கீழே சரிந்த நிலையில், ஸ்கிரீன் துணி கழுத்தை இறுக்கி, கோகுல் நிகழ்விடத்திலேயே மூச்சுத் திணறி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த குமாா்-தனகோடி தம்பதி பாா்த்த போது, சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.