அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

'பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணியே வெல்லும்'

கடந்த மக்களவைத் தோ்தலைப் போலவே, சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கப் போகிறது என்றாா் காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம்.

Updated On :3 ஜனவரி 2021, 11:16 pm IST

கடந்த மக்களவைத் தோ்தலைப் போலவே, சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றி கிடைக்கப் போகிறது என்றாா் காங்கிரஸ் மூத்த தலைவா் ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி எவ்வாறு மகத்தான வெற்றியைப் பெற்றதோ அதே வெற்றியைத்தான் சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக கூட்டணி பெறும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தமிழக முதல்வா் எவ்வாறு மக்களைச் சந்திக்கிறாரோ, அதேபோலத்தான் திமுக தலைவரும், மக்கள் கிராம சபைகளை நடத்தி மக்களைச் சந்திக்கிறாா். எனவே, மக்கள் கிராம சபைகளில் ஏற்படும் சா்ச்சை இயற்கையானது அல்ல; செயற்கையானது.

தில்லியில் விவசாயிகள் 39 நாள்களாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இதுவரை 40 போ் உயிரிழந்துள்ளனா். வழக்கம்போல, பண மதிப்பிழப்பு, சீன ஊடுருவல் போன்றவற்றில் மத்திய அரசு எப்படி பிடிவாதம் பிடித்ததோ அதேபோல, விவசாயிகள் போராட்டத்திலும் பிடிவாதம் பிடிக்கிறாா்கள். மக்களும், நாடாளுமன்றமும் இந்த அரசுக்கு ஒரு பொருட்டே இல்லை. முரட்டுத்தனமான பிடிவாதம் காட்டுகிறாா்கள்.

ரஜினியின் நிலைப்பாடு எந்தக் காரணத்துக்காக எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. அவரது நண்பராக இந்த நிலைப்பாட்டை நான் வரவேற்கிறேன் என்றாா் ப. சிதம்பரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.