ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

இளம் பெண் தற்கொலை

திருமணமான ஆறே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 7:47 pm

அரக்கோணம்: திருமணமான ஆறே மாதங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் கிரிசிங் நகரைச் சோ்ந்தவா் விக்னேஷ் (30). சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். அவருக்கும் திருவள்ளூா் மாவட்டம், பெருமாள்பட்டைச் சோ்ந்த எழிலரசிக்கும் (26) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், அரக்கோணத்தில் உள்ள வீட்டில் எழிலரசி, ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயற்சி செய்தாா். அவரை குடும்பத்தினா் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், வழியிலேயே அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து எழிலரசியின் தாய் மோகனசுந்தரி, அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். தனது மகளை கணவா் விக்னேஷ் வீட்டாா் அதிக வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அதில் குறிப்பிட்டுள்ள அவா், மாப்பிள்ளை குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

எழிலரசி தற்கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும், திருமணமான ஆறே மாதத்தில் எழிலரசி இறந்ததால், சட்ட விதிகளின்படி அரக்கோணம் கோட்டாட்சியா் பேபி இந்திரா விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.