டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

ஆலயம் அமைக்க ஆயிரம் பேர்!

  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் கிராமத்தில் ஒரு பழமையான சிவன் கோயில் இருந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் புதர்களை அகற்றி, இடிந்து கிடந்த இவ்வாலயம் கண்டுபிடிக்கப்பட்ட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:18 pm IST



  திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் கிராமத்தில் ஒரு பழமையான சிவன் கோயில் இருந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் புதர்களை அகற்றி, இடிந்து கிடந்த இவ்வாலயம் கண்டுபிடிக்கப்பட்டது. "புதிதாக ஒரு ஆலயம் எழுப்புவதைவிட பழம்பெருமை வாய்ந்த சிதிலமான கோயில்களை புனரமைப்பது முக்கியமானதாகும்' என்ற காஞ்சி பரமாச்சாரியாரின் வாக்கிற்கேற்ப, பாழ்பட்டுக் கிடந்த இந்த சிவன் கோயிலைச் செப்பனிட, கடந்த ஆண்டு கிராம இளைஞர்கள் ஒன்று கூடித் தீர்மானித்தனர்.

  இக்கோயிலில் வாயிற்படியில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றின் உள்ள செய்திகளைப் படிக்க தொல்லியல் ஆய்வாளர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களால் இக்கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு, பின்வரும் விஷயங்கள் தெரிவிக்கப்பட்டன.

  ""இக்கல்வெட்டுகள் கி.பி. 10-11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. ராஜ ராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுகளாக இவை இருக்கலாம். (காழியூர்) கோட்டத்துப் பாகூர் நாட்டு மாத்தூர் எனப்படும் இக்கிராமத்தில் சோமீஸ்வர தேவர் கோயிலில் பஞ்சவன் மகாதேவி மங்கலத்தைச் சேர்ந்த ஒருவர், கோயிலில் விளக்கு எரிப்பதற்கான நெய்க்காக 90 ஆடுகள் கொடுத்துள்ளார். "இந்தத் தர்மத்தைத் தொடர்ந்து பராமரித்து வருபவர்கள் பாதம் என் தலைமேலது' என அவரே இக்கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். பாண்டவ மங்கலத்து கோசிகன் என்று தனது பெயரையும் கல்வெட்டில் பொறித்துள்ளார்.

  இத்தொன்மையான திருக்கோயில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட மத அடிப்படையிலான ஆட்சி அதிகார மாற்றங்களால் சிதைக்கப்பட்டிருக்கக் கூடும்'' என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  இத்திருக்கோயில் சிதைக்கப்பட்ட அதே காலத்தில் பக்கத்துக் கிராமமான மாங்கால் கிராமத்து மக்கள், தங்களூர் தெய்வ வடிவங்களைக் காக்க மண்ணில் குழிதோண்டி, நெல்லுக்குள் மறைத்த தகவலும் உள்ளது.

  அதற்கெடுத்த கூழமந்தல் என்னும் ஊரில் இதேபோல் மண்ணில் மறைக்கப்பட்ட பெருமாள் வடிவம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டு, "பேசும் பெருமாள்' என்ற திருநாமம் பெற்றார். அவருக்குப் பின்னர் திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இத்திருக்கோயில் சிதைக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு தெள்ளெனப் புலனாகும்.

  ""பாவூர் என்று தற்போது மாத்தூரின் அருகில் அமைந்து வழங்கப்பட்டு வரும் ஊரே இங்குள்ள கல்வெட்டுகளில் பாகூர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வூர், பத்து நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு வட்டத் தலைநகருக்கு உரிய நிர்வாக அதிகார அமைப்போடு இருந்திருக்கலாம்'' என்கின்றனர் தொல்பொருள் ஆய்வாளர்கள்.

இன்றும் ஊரில் "கோட்டை மேடு' என்று ஒரு பகுதி உள்ளது என்பது இங்கு கருதத் தக்கது.

  பஞ்சவன் மகாதேவி என்பது ராஜராஜனின் மனைவியருள் ஒருவர் பெயராகும். அவரது பெயரால் சதுர்வேதி மங்கலம் என்ற (வேதமறிந்த பிராமணர்கள்) குடியிருப்பு இருந்துள்ளது. அவ்வூரைச் சேர்ந்த கோசிகன் என்பவரே இக்கல்வெட்டை வடித்திருக்க வேண்டும் என நாம் ஊகிக்கலாம்.

  மாத்தூரில் உள்ள இக்கோயிலில் சிதிலமடைந்த நிலையில் மயில் மேலமர்ந்த முருகன் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை, பிள்ளையார் சிலை போன்ற பழமையான சிலைகள் காணப்படுகின்றன.

  இக்கோயிலிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் ஒரு திரிசூலக் கல் இக்கோயிலின் எல்லைக்கல்லாக உள்ளது.

  சிதைக்கப்பட்ட திருக்கோயிலை அதே நிலையில் பார்த்து வருவது இவ்வூர் மக்களின் மனதைப் பாதிக்க, பல தலைமுறைகளாகச் சிதிலமடைந்த நிலையிலேயே இருக்கும் இத்திருக்கோயிலை பழைய வடிவமைப்பில், கருங்கல் கட்டிடத்திலேயே, நீடித்து நிலைத்து அழியா வண்ணம் அமைக்க அவர்கள் முனைந்துள்ளனர்.

  இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலைப் புனரமைத்திட 1000 அன்பர்கள் ஆளுக்கு ரூபாய் 1000 வழங்கினால் கட்டுமானப்பணிகளை ஓராண்டிற்குள் நிறைவு செய்துவிடலாம்.

  இத்திருக்கோயில் பணிகளுக்கு துணை நிற்போரது பாதங்களைத் தன் தலை மீது சுமப்பதாக 11ம் நூற்றாண்டில் ஆடுகளைத் தானமாக வழங்கிய கோசிகன் குறிப்பிட்டுள்ளது இங்கே நினைவு கூரத் தக்கது. அதற்காக கோசிகன் என்ற பக்தர் தலைமீது நமது கால்கள் இருக்க வேண்டாம்; சோமீஸ்வரனின் பாதங்களில் நமது தலை இருக்கட்டுமே!

  விவசாய வேலை தவிர வேறு வருவாய் இல்லாத கிராமமாக மாத்தூர் இருப்பதனால், திருப்பணிக்குத் திட்டமிடப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாய் பணத்தைத் திரட்டுவதற்கு இக்கிராமத்தினர்க்கு பிறர் உதவி தேவைப்படுகிறது. நல்லுள்ளம் கொண்ட பக்தர்கள் முன் வந்து இக்கோயில் திருப்பணிக்கு தாராளமாக உதவி செய்து, ஈசனின் அருள் பெறலாம்.

  இத்திருக்கோயில் பணிக்காக மாமண்டூர் இந்தியன் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை அனுப்புபவர்களுக்கு திருக்குடமுழுக்கு அழைப்பிதழும், வரவு-செலவு கணக்கு விவரங்களும் வழங்கப்படும் என கோயில் திருப்பணிக்குழு தெரிவிக்கின்றது.

  வங்கிக் கணக்கு எண் : 815584569.

கணக்குப் பெயர் : Someeswaranathar Thirukoil.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.