கல்விக் கடவுள் - மாணவர் தேர்வில் தேர்ச்சிபெற ஹயக்ரீவர் ஹோமம்

சென்னை நகரில் கோயம்பேட்டிற்கு அருகில் சின்மையா நகரை அடுத்துள்ள நடேச நகர் சிவ-விஷ்ணு ஆலயத்தில்...
கல்விக் கடவுள் - மாணவர் தேர்வில் தேர்ச்சிபெற ஹயக்ரீவர் ஹோமம்
Updated on
1 min read

சென்னை நகரில் கோயம்பேட்டிற்கு அருகில் சின்மையா நகரை அடுத்துள்ள நடேச நகர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் 11.02.2018 அன்று கல்வி - ஞானம் - அறிவு அளிக்கும் தெய்வமான ஹயக்ரீவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கல்விகற்கும் மாணவர்கள் வருகின்ற தேர்வில் வெற்றிபெறவும், கல்வி ஞானம் பெறவும் வேண்டி ஹயக்ரீவர் ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. 

அதிக அளவில் மாணவர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு ஹயக்ரீவரை வழிபட்டனர். ஹோமத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம், ரட்சை கயிறு, நோட்டுபுத்தகங்கள், வெள்ளி டாலர், பேனா போன்றவை அளிக்கப்பட்டனர். 

மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மகிழ்ச்சியுடன் வழிபட்டனர். 

தொடர்புக்கு - 9840094246

தகவல் - எஸ்.வெங்கட்ராமன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com