ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - கன்னி லக்னம் (பகுதி 6)

ஜாதகத்தில் அடிப்படை வேர் - சிம்ம லக்கின (1-10-2019) தொடர்ச்சியாக- இன்று வானமண்டலத்தில்..
ஜாதகத்தில் அடிப்படை வேர் லக்னம் - கன்னி லக்னம் (பகுதி 6)

ஜாதகத்தில் அடிப்படை வேர் - சிம்ம லக்கின (1-10-2019) தொடர்ச்சியாக- இன்று வானமண்டலத்தில் 6வது கட்டமான கன்னி லக்னம் பற்றிப் பார்ப்போம். இந்த லக்கினத்தை  ஆளும் கிரகம் புதன் என்கிற அலி கிரகம் ஆகும். இந்த கன்னி லக்கினம் இரட்டை தன்மை கொண்ட உபய ராசி ஆகும். இது காலபுருஷ தத்துவப்படி ஆறாம் பாவமானது  உடலின் அடி வயிற்று பகுதியும் குறிக்கும் பாவம்.

கன்னி லக்கினத்தில் புதன் ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெரும் இடமாகும். புதன் புத்திசாலித் தனத்தை இயற்கையாகவே இந்த லக்கினகாரர்களுக்கு தந்துவிடுவார்.  ஆனால் புதன் நீச்சமோ, பகையோ பெற்றால் படிப்பு அறிவு சார்ந்த பகுதியில் பிரச்னை ஏற்படுத்தும். எந்த லக்கினகாரராக இருந்தாலும் புதன் இங்கு அமர்ந்தால் ஏதாவது  சாதனையாளராக இருப்பார்கள். கன்னியின் அதிபதி புதன் என்பவர் நண்பர், தாய்மாமன், காதலர் குறிக்கும் முக்கிய கிரகம். 

இந்த பாவத்திற்கு சுக்கிரன் நீசம் பெறுவார் ஆவார், ஆனால் அவர்தான் யோகர் 2,9-க்கும் உரியவர். இந்த லக்னகாரர்களுக்கு சந்திரன், சனி, ராகு, கேது நண்பர்கள் என்பதால்  நன்மைகளை செய்திடுவார்கள். சூரியன் 12க்கு உரியவர் நிலையில் இருப்பார் இருந்தாலும் இவர் இந்த லக்கினகாரர்களுக்கு அரை அசுபர் என்று சொல்லாம். இந்த இடத்தில்  அஸ்தம் (சந்திரன்) மட்டும் முழு நட்சத்திரம் ஆகும். மற்ற சூரியன் செவ்வாய் நட்சத்திரங்களான - உத்திரம், சித்திரை நட்சத்திரங்கள் உடைபட்டவை ஆகும். 

ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்திருப்பதுபோல் இந்த நட்சத்திர குணங்கள் மாறுபடும். குரு என்பவர் இவருக்கு பாதகாதிபதியாகவும் மற்றும் குரு சந்திரன்  மாரகதிபதியாகவும் வருவார் புதன் வீடுகளான மிதுனம், கன்னி இருவருவருக்கும் குரு நல்லவர் அல்ல. இந்த லக்கனக்காரர்களுக்கு ஒரு சிலருக்கு திருமண வாழ்க்கை  பாதிப்பு இருக்கும். குருவின் சுப பார்வை மட்டும் நன்மை தரும். சனி என்பவர் 5, 6கும் உரியவராக இருந்து நன்மை அளிப்பார். அடுத்து செவ்வாய் என்பவர் மூன்றுக்கும்  எட்டுக்கும் உரியவர் முடிந்த வரை செவ்வாய் கிரகத்தால் கன்னி லக்கினகர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும். 

முக்கியமாக அஷ்டமாதிபதி வேலை சிலருக்கு ஏற்படுத்துவார். இந்த லக்கினத்திற்கு ஒரு பழமொழி உள்ளது அது கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் என்று அந்த மாதம்  முழுவதும் பூமிகாரகன் நீர் இல்லாமல் வறண்ட நிலைகளும் தள்ளப்படுவான். ஆனால் கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது காலம் ஜாதகருக்கு கொஞ்சம் பிரச்னைகளை  ஏற்படுத்தும். முக்கியமாக குருவும் செவ்வாயும் தசா புத்திகளில் துன்பத்தையே கொடுப்பார்.

கன்னியின் சின்னம் ஒரு கன்னி பெண் கையில் விளக்கும் மற்றொரு கையில் நெற்கதிர் கொண்ட ஏந்தி இருப்பார்கள். இந்த ஜாதகர்கள் நிறைய பேருக்கு விவசாயம் மற்றும்  ஆசிரியராக இருப்பார்கள். கன்னியின் தன்மையும், ஒழுக்கமும், பொறுமையும் இவர்கள் உள்ளார்ந்து இருக்கும்.   

குறித்திட்டேன் கன்னியிலே உதித்தபேர்க்கு
குற்றம்வந்து நேருமடா குருவினாலே
பரித்திட்டேன் பண்டுபொருள் நிலமும்சேதம்
பகருகின்ற குருபதியும் கோணமேற
சிரித்திட்டேன் சென்மனுக்கு வேட்டலுண்டு
செந்திருமால் தேவியுமே பதியில் வாழும்
குறித்ததொரு மனை தனிலே தெய்வமுண்டு
குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே..

(புலிப்பாணி)

இப்பாடலில் கன்னி லக்கின பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் வலுத்திருந்தால் புதிதாக கற்பதில், படிப்பதிலும்  மிகுந்த ஆர்வம் இருக்கும். கணிதத்திலும், தன்னை சுற்றி சுத்தமாக வைத்திருப்பார்கள், விஞ்ஞான துறையில் இருப்பார்கள், பெருந்தன்மை கொண்ட தர்மவான், அறிவு  நுட்பம் கொண்டவர்கள், கடன் இருக்கும், நிலையில்லாத தன்மை கொண்டவர்கள், ரகசிய மிக்கவர், திருமணம் கொஞ்சம் பிரச்னை, சிறுவயதில் மகிழ்ச்சியும் பிற்பகுதியில்  கொஞ்சம் பிரச்னைகளை எதிர்கொள்வார்கள், திறமைசாலி, எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். 

பொறியியல் வல்லுநர், பேச்சால் மற்றவர்களை ஆட்கொள்பவர்கள், உணவு பிரியர், கவரக்கூடியவர்கள், நகைசுவை தன்மை இருக்கும், பேச்சில் நிதானம், பிற மொழிகளை  கற்பதில் ஆர்வம், நிறையபேர் நோய்ப் பாதிப்பு இருக்கும், தோல் பிரச்னை இருக்கும், ஆரோக்கியத்தில் ஒருவித நடுக்கம் இருக்கும், பயம் இவர்களை துரத்தும், கலைத்துறை  மீது அதிக காதல் கொண்டவர்கள், சிறந்த ஆசிரியராக இருப்பார்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் இந்த லக்னத்தில் குரு உதவியோடு நீதிபதிகளாவும், இரண்டுக்கு  மேற்பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள்.

கன்னி லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ம் பாதங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது கன்னி லக்கின பலன்கள்  பார்ப்போம்.

கன்னி லக்கனத்தில் உள்ள நட்சத்திர பாதங்கள்: உத்திரம் 2,3,4 ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதங்களில் லக்கின புள்ளி இருக்கும் பொது கன்னி லக்கின பலன்கள்  பார்ப்போம்.

உத்திரம்: உத்தரத்தின் அதிபதி சூரியன் ஆவார். இந்த உத்திரம் நட்சத்திரத்தில் 2,3,4 ம் பாதத்தில் லக்கினம் அமைந்திருப்பவர்கள் நேர்மை மிக்கவர்கள், பலவானாகவும்,   வறியவன், உடலில் எதாவது குறைபாடு இருக்கும், குற்றமுடன் உள்ளம் அலைபாயும், கல்வி சிறந்தவன், முன்கோபியாகவும் இருப்பார்கள், எந்தவித எதிர்பார்ப்பும்  இல்லாமல் மற்றவருக்கு உதவுவார்கள், பெண் மீது அன்பு கொண்டவன், சுத்தமற்றவன், உற்றார் உறவினரிடம் பாசம் இருக்கும், ரகசியம் இருக்கும், பெருஞ்சுயநலவாதி,  பேசுவதில் நேர்மை தெரியும், அதிர்ஷ்டசாலி, நன்றி மறக்கமாட்டார், யாரையாவது சார்ந்து இருப்பான், பேசுவதில் குதர்க்கம் தெரியும். 

அஸ்தம்: இந்த நட்சத்திரம் உடைபடாத நட்சத்திரம். சந்திரன் அதிபதி. இந்த நட்சத்திரத்தில் லக்கினம் அமைந்திருப்பவர்கள் அறியப் பண்பு மிக்கவர், இதமாகப் பேசுவார்கள்,  உத்தமர், அன்னை அரவணைப்பு குறைவாக இருக்கும், தெளிந்தவன், கலைகளை ரசிப்பவன், அதிகம் பேசுவான், கூச்ச சுபாவம், அமைதி மிக்கவர், விட்டுக்கொடுத்து  வாழ்வார்கள், வியாதி இருந்துகொண்டு இருக்கும், பகையுணர்ச்சி கொண்டவர், சூதுவாது கொண்டவன், வியாபாரி, தர்மவான், உண்மையானவன், புகழுடையவன், எந்த சண்டையிலும் சேரமாட்டார்கள், சந்தோஷமாக இருப்பான், அறநெறியானவன். 

சித்திரை: சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன் ஆவார். இந்த சித்திரை நட்சத்திரத்தில் 1,2 ம் பாதத்தில் லக்கனம் அமைந்திருப்பவர்கள் விரிவாக பேசும் தன்மை  கொண்டவன், தவம் பிடிக்கும், சமூக விரோத செயல்களைச் செய்வார், சிலருக்கு வறுமையில் இருப்பார்கள், நெடிந்துயரம் தோற்றம், மனம் ஒரு ஓட்டம் கொண்டது,  கண்ணில் குறைபாடு ஏற்படும், அலைந்து திரிபவன், ஒப்பற்ற பேச்சாளி, உடலை கவனமாகப் பார்த்துக்கொள்வான், அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் ஆர்வம் மிக்கவர்,  பிடிவாதம் இருக்கும்.

மேற்கொண்ட அனைத்தும் பொதுப்பலன்கள் ஆகும். இவற்றில் எந்தெந்த கிரகம் சேர்க்கை பார்வை பெற்றிருக்கிறது என்று பார்க்கவேண்டும். ஜாதகருக்கு அவரவர் ஜாதக  கட்டமும் தசை புத்தியும் கன்னி லக்கினத்திற்கு ஏற்ப கிரகங்களால் நல்லது கெட்டதும் என்று அதற்கேற்ப அதற்குரிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், மறைவு பெற்றால்  நன்மைகள் கிட்டும்.

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com