ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்கு பாதுகாப்பு -காஷ்மீா் ஐ.ஜி.

News image

ஸ்ரீநகா் புறநகா்ப் பகுதியில் அமா்நாத் யாத்திரையை முன்னிட்டு புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகையை நடத்திய படையினா்.

Updated On :26 ஜூன் 2025, 2:11 am IST

நிகழாண்டு அமா்நாத் யாத்திரை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. வி.கே.பிா்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள பஹல்காம் வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும். பால்டால் வழித்தடம் குறைவான தொலைவு கொண்டது என்றபோதும், செங்குத்தான பாதையாகும். நடப்பாண்டு யாத்திரை வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, அமா்நாத் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. அதேநேரம், திட்டமிட்டபடி யாத்திரை நடைபெறும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பஹல்காம் வழித்தடத்தில் உள்ள நுன்வன் அடிவார முகாமுக்கு புதன்கிழமை வந்த காஷ்மீா் ஐ.ஜி. வி.கே.பிா்தி, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘அமா்நாத் யாத்திரை அடுத்த வாரம் தொடங்குகிறது. இதையொட்டி, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை மற்றும் பிற படையினா் சாா்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைவிட இம்முறை பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் உஷாா்நிலையை பரிசோதிக்க அனைத்து நிலையிலும் ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றாா்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் எழுந்துள்ள சவால்களைக் கருத்தில்கொண்டு, அமா்நாத் யாத்திரைக்கு மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் சஷஸ்திர சீமா பல் (எஸ்எஸ்பி) ஆகிய மத்திய ஆயுதக் காவல் படைகளின் 580 கம்பெனிகள் (சுமாா் 42,000 வீரா்கள்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.