
திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரியம்மன் கோயிலில் இன்று தேர்த் திருவிழா
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் காட்சியளிக்கும் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் காட்சியளிக்கும் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) தேர்த் திருவிழா நடைபெறுகிறது.
இக்கோயிலில் திரிபுரசுந்தரி அம்பாளுக்கு ஆடிப்பூர திருக்கல்யாணப் பெருவிழா கடந்த 4-ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் காலை, மாலை இரு வேளையும் தொட்டி உற்சவமும், ஞாயிற்றுக்கிழமை இரவு அலங்கார விமானம், திங்கள்கிழமை அதிகாரநந்தி உற்சவம், கிரிப் பிரதட்சணம், சந்திரப் பிரபை வாகனம், செவ்வாய்க்கிழமை காலை மாலை தொட்டி உற்சவம், புதன்கிழமை காலை தொட்டி உற்சவம், அன்று மாலை ரிஷப வாகனம், வியாழக்கிழமை காலை தொட்டி உற்சவம், இரவு யானை வாகனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அடுத்ததாக, வெள்ளிக்கிழமை காலையில் தேர்த் திருவிழா, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மாலை தொட்டி உற்சவம், திங்கள்கிழமை காலை சங்குதீர்த்த தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
செவ்வாய்க்கிழமை இரவு திரிபுரசுந்தரி அம்மன் மகாபிஷேகம், திருக்கல்யாணம் பஞ்சமூர்த்திகள் புற்ப்பாடு ஆகியவை நடைபெறும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் கே.எஸ்.நற்சோணை, செயல் அலுவலர் ஆ.குமரன் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



