நாளை வானில் நிகழும் அரிய நிகழ்வை பார்க்கத் தவறினால் அடுத்தது 2029-ல் தான்!
2018-ம் ஆண்டுக்கான முழு சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமையான (நாளை) நிகழ உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம் இது.


2018-ம் ஆண்டுக்கான முழு சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமையான (நாளை) நிகழ உள்ளது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம் இது.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் முழு கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும்.
தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும். இந்த முழு சந்திர கிரகணம் மொத்தம் 102 நிமிஷங்கள் நிகழ உள்ளது. நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இதுவே ஆகும்.
வெறும் கண்களால் பார்க்கலாமா?
நிகழும் இந்த அரிய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். இதனால் தீங்கு விளையாது.
பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு
பொதுமக்களும், மாணவர்களும் சந்திர கிரகணத்தை நேரடியாகவும், தொலைநோக்கிகள் மூலமும் பார்த்துப் பயன்பெற பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக 5 தொலைநோக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நீண்ட முழு சந்திர கிரகணம் அடுத்ததாக 2029 ஜூலை 25-ம் தேதி நிகழும். அப்போதும் 102 நிமிஷங்கள் நீடித்திருக்கும்.
பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்
அதுபோல, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள் பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (ஜூலை 27) நடைபெறுகிறது. இதன் காரணமாக ஜூலை 25 முதல் ஜூலை 31-ம் தேதி வரை பூமியின் அருகே செவ்வாய் நெருங்கி வருகிறது. அப்போது, பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தொலைவு 5.76 கோடி கிலோ மீட்டராக இருக்கும். நீள்வட்டப் பாதையில் சுற்றும் செவ்வாய் கோள் மிகுந்த தொலைவுக்குச் செல்லும்போது 38 கோடி கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும்.
இந்த எதிரமைவு நிகழ்ச்சியை பொதுமக்கள் காணவும் பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சூரியனுக்கு நேர் எதிரே 180 டிகிரி கோணத்தில் ஒரு கோள் வரும்போது, அந்தக் கோள் எதிரமைவு கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அந்த எதிரமைவின்போது, அந்தக் கோளானது பூமிக்கு மிக அருகில் வருவதோடு, பெரிதாகவும், ஒளியுடனும் காணப்படும். மேலும், சூரியன் மறையும்போது உதயமாகி, இரவு முழுவதும் வானில் காணப்படும். இந்த நேரத்தில் அந்தக் கோள் குறித்த ஆராய்ச்சியையும் மேற்கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...