கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்பதி செல்வோருக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்! ஸ்ரீவாரி பாதத்துக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் நாராயணகிரி மலையில் ஸ்ரீவாரி பாதையில் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :11 ஜூன் 2018, 10:32 am

தினமணி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் நாராயணகிரி மலையில் ஸ்ரீவாரி பாதையில் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நாராயணகிரி மலையில் ஏழுமலையானின் பாதம் உள்ளது. அதனைப் பக்தர்கள் ஸ்ரீவாரி பாதம் என்று அழைக்கின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் நாராயணகிரி மலை உச்சிக்குச் சென்று வெங்கடாசலபதியின் பாதத்தைத் தொட்டு வழிபட்டு வருவது வழக்கம். 

இந்நிலையில் நாராயணகிரி மலை அருகே யானைகள் கூட்டமாக வந்து அப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகின்றனர். ஸ்ரீவாரி பாதத்தை வழிபட வந்த பக்தர்கள் காட்டு யானைகளைக் கண்டு அலறியடித்து வந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சிறு மரங்களை வேருடன் பிடுங்கி எறிந்து, அங்கேயே முகாமிட்டுள்ளது. 

இதனால் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி நாராயணகிரி மலைக்குச் செல்லும் பாதையைத் தாற்காலிகமாக முடியுள்ளனர். தொடர்ந்து யானைக்கூட்டம் வேறு பகுதிக்கு செல்லும் வரை இந்தத் தடை தொடரும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.