எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

தீபாவளி பண்டிகை: கேதர்நாத் கோயிலில் மோடி இன்று வழிபாடு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி

Updated On :6 நவம்பர் 2018, 12:46 am IST


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும் நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
கேதர்நாத் கோயிலில் பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தவுள்ளார். அதையடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டில் பெருவெள்ளத்தில் கேதர்நாத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிடவுள்ளார்.
கேதர்நாத் கோயிலில் கடைசியாக கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, கடந்த 2014ஆம் ஆண்டில் சியாச்சின் சிகரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 
கடந்த 2015ஆம் ஆண்டில் பஞ்சாப் எல்லையில் இந்திய வீரர்களுடன் தீபாவளியை அவர் கொண்டாடினார். 2016ஆம் ஆண்டில் ஹிமாசலப் பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடினார். 
2017ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குரேஸில் இந்திய வீரர்களுடன் தீபாவளியை மோடி கொண்டாடினார் என்று மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் குறிப்பிட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.