உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலக சனிக்கிழமையில் இவரை வழிபடுங்க!

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். பொதுவாக ஏழரை சனி, ஜென்ம சனி,
உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் விலக சனிக்கிழமையில் இவரை வழிபடுங்க!
Published on
Updated on
1 min read


நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். பொதுவாக ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து, கண்ட சனி உள்ளவர்கள் இந்தக் கடவுளை வணங்கினால் சனிபகவான் நம்மை நெருங்குவதில்லை என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

ராமரின் தூதுவர் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். இராமாயணத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்பவர் அனுமன். வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டுத் தினங்கள் ஆகும். 

அனுமனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

• அனுமனுக்கு வெண்ணெய் காப்பு சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.

• தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாகக் கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம். 

• அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும். 

• அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம். 

• அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். இவரை வழிபடும் பக்தர்களை சனிபகவான் நெருங்குவதில்லையாம். 

• அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றைப் பெறலாம்.

• திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும்.

• துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com