
200 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சாவூர் பெரியகோயிலில் விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
தஞ்சாவூர் பெரியகோயிலில் மராட்டிய மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட விநாயகருக்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முதல் முறையாக

தஞ்சாவூர் பெரியகோயிலில் உள்ள விநாயகர் சிலைக்கு வியாழக்கிழமை செய்யப்பட்ட சந்தனக் காப்பு அலங்காரம்.
தஞ்சாவூர் பெரியகோயிலில் மராட்டிய மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட விநாயகருக்கு 200 ஆண்டுகளுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முதல் முறையாக வியாழக்கிழமை சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. சோழர்கள் ஆட்சிக்குப் பிறகு வந்த பாண்டியர்கள் இக்கோயிலில் பெரியநாயகி என அழைக்கப்படும் அம்மன் சன்னதியை அமைத்தனர். இதையடுத்து, தஞ்சாவூரில் ஆட்சி அமைத்த நாயக்கர்கள் இக்கோயிலில், முருகன் சன்னதி, நந்தி மண்டபம் உள்ளிட்ட சில திருப்பணிகளை மேற்கொண்டனர். பின்னர், மராட்டியர் காலத்தில் திருச்சுற்றில் பின்புறம் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அக்காலகட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் இந்த விழா நின்றுபோனது.
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சன்னதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வியாழக்கிழமை விநாயகருக்கு சுமார் 25 கிலோ சந்தனத்தை கொண்டு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





