டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திருப்பாம்புரம் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி,  திருப்பாம்புரம் கோயிலில் பிப்.13 நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்காக..

News image
Updated On :13 பிப்ரவரி 2019, 11:31 am IST

ராகு-கேது பெயர்ச்சியையொட்டி,  திருப்பாம்புரம் கோயிலில் பிப்.13 நடைபெறும் சிறப்பு வழிபாட்டுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ராகு-கேது பெயர்ச்சி புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு நடைபெறுகிறது. ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர். இந்த பெயர்ச்சி காரணமாக ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி, நன்னிலம் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் அருள்மிகு வண்டுசேர்குழலி உடனுறை சேஷபுரீசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கோயிலில் ராகு-கேது தனிச் சன்னிதியில் எழுந்தருளி, அருள்பாலிக்கின்றனர். 

ராகு காலங்களில் இச்சன்னிதியில் அபிஷேகம், அர்ச்சனை செய்வோருக்கு தோஷங்கள் விலகி நலம் கிடைக்கும் என்பதால், தினசரி ராகு கால நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுபோல, பெயர்ச்சி நாளிலும் திரளான பக்தர்கள் வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, ராகு-கேது சன்னிதியில் பக்தர்கள் நெரிசலின்றி சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கோயிலுக்குள் பக்தர்கள் வரிசையாக செல்லும் வகையிலும், சேஷபுரீசுவரரை தரிசிக்கும் பகுதியிலும், வரிசையாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெயர்ச்சி நடைபெறுவது பிற்பகல் நேரம் என்பதால் வெயிலின் தாக்கம் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு, கோயிலுக்கு வெளியிலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர கோயிலுக்கு அருகிலேயே குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வாகனங்கள் நிறுத்துவதற்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை தொடங்கிய முதல் கால பூஜையில் விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை நடைபெறும் இரண்டாம் கால பூஜையில் சிறப்பு பரிகார ஹோமம், மகா பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்படுகின்றன. பெயர்ச்சி நேரமான 2.02 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். 

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.