சிம்மாசனம் எனப் பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா?

சிம்மாசனம் எனப் பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா?

பக்த பிரகலாதனுக்கு அருள்புரியவும், அசுர குலத்தைச் சேர்ந்த மாபெரும் சக்கரவர்த்தியான
Published on

பக்த பிரகலாதனுக்கு அருள்புரியவும், அசுர குலத்தைச் சேர்ந்த மாபெரும் சக்கரவர்த்தியான அவனது தந்தை இரணிய கசிபுவிடமிருந்து இந்த உலகத்தைக்  காப்பாற்றுவதற்காகவும் தூணிலிருந்து அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். 

இரண்யகசிபுவிற்கு பிறகு அவனது ஆசனத்தில் அமர்ந்துகொண்டு பிரகலாதனை மடியில் அமர்த்தி அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பகவான் நரசிம்மர். 

அப்போது பிரகலாதன் சொன்னான், லட்சுமி நரசிம்மா! அரசர்கள் எதில் அமர்ந்து ஆட்சி செய்வார்களோ, அந்த இருக்கைக்குப் பெயர் நிருபாசனம் (ராஜா ஆசனம்) ஆகும். 

நிருபன் என்றால் ராஜா. ஆனால் இன்றைக்கு முதல் முறையாக அதில் சிங்கமாகிய நீங்கள் ஏறி அமர்ந்துள்ளீர்கள். எனவே இனிமேல் எத்தனை அரசர்கள் தங்களது ஆசனங்களில் அமர்ந்து எங்கு ஆட்சி செய்தாலும், இனிமேல் அது உங்களது பெயரால் சிம்மாசனம் என்று அழைக்கப்படும் என்று கூறினான்.

நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை… “இதுவே சனாதன தர்மம்….”

ஆன்மீக வாழ்க்கைக்கு இந்து சமய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!

- கோவை பாலகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com