விருட்சம் என்றால் மரம். இதில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் உள்ளது. தோஷம் உள்ளவர்கள் அந்தந்த விருட்சத்தை வழிபாடு செய்து வரலாம்.
27 நட்சத்திரத்திற்குரிய விருட்சம்
அஸ்வினி - எட்டி
பரணி - நெல்லி
கார்த்திகை - அத்தி
ரோகிணி - நாவல்
மிருகசீரிடம் - கருங்காலி
திருவாதிரை - செங்கருங்காலி
புனர்பூசம் - மூங்கில்
பூசம் - அரசு
ஆயில்யம் - புன்னை
மகம் - ஆலமரம்
பூரம் - பலா
உத்திரம் - அலரி
அஸ்தம் - வேலம்
சித்திரை - வில்வம்
சுவாதி - மருதம்,
விசாகம் - விளா
அனுஷம் - மகிழம்
கேட்டை - பிராய்
மூலம் - மாமரம்
பூராடம் - வஞ்சி
உத்திராடம் - பலா
திருவோணம் - எருக்கு
அவிட்டம் - வன்னி
சதயம் - கடம்பு
பூரட்டாதி - தேமா
உத்திரட்டாதி - வேம்பு
ரேவதி - இலுப்பை
ஒருவரது பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை வாங்கி ஒரு கோவில் சார்ந்த வனப்பகுதியில் தென்மேற்குப் பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நடவேண்டும். அந்த மரக்கன்றை அவரது பிறந்த நட்சத்திர நாளில் நடுவது மிக நன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களை ஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்த மரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்தால் மரக்கன்று வளர வளர அதை நட்டவரின் வாழ்க்கையும் மலரும். அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் மரக்கன்று ஈர்த்துவிடும்.
அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாக இருக்கும். அவரது கர்ம வினைகளை நீக்கும் தன்மை கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



