விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாளை திருப்பதிக்குச் செல்பவர்கள் இதைக் கவனிக்கவும்!

திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையான(செப்.23) நாளை

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 5:47 am

தினமணி


திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையான(செப்.23) நாளை 5 மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருமலையில் ஆண்டு முழுவதும் ஏதாவதொரு திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இருப்பினும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

அந்தவகையில், செப். 30-ம் தேதி முதல் அக். 8-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நாளை ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளது.

அதனால் நாளை காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது. 

ஆண்டுக்கு 4 முறை அதாவது வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.