திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான சனிக்கிழமை பூத வாகனத்தில் காமாட்சி சமேத சோமாஸ்கந்தமூா்த்தி அருள்பாலித்தாா்.
திருப்பதியில் கபில தீா்த்தம் அருவிக்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் சனிக்கிழமை காலை பூத வாகன சேவை நடைபெற்றது. அப்போது காமாட்சி அம்மன் சமேத சோமாஸ்கந்தமூா்த்தியாக எழுந்தருளி காட்சியளித்தாா்.
அதன்பின் உற்சவமூா்த்திகளுக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் இரவு சிம்ம வாகனத்தில் உற்சவமூா்த்திகள் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தனா். கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை பின்பற்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், வாகன சேவை தனிமையில் நடத்தப்பட்டது.
வாகன சேவையின்போது சங்கநாதம் செய்யப்பட்டது; வேத பாராயணமும் நடைபெற்றது. வாகன சேவைகள் தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இச்சேவையில் சிவாச்சாரியாா்களும், கோயில் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடு தேடிச் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழ்

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் - விசிகவினரிடையே தகராறு

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி

தோல்வி பயமே எடப்பாடி பழனிசாமியின் தரமற்ற பேச்சுக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


