திருமலையில் ஏழுமலையானை வெள்ளிக்கிழமை 49,651 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 25,494 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
நாள்தோறும் ஆன்லைன் மூலம் 25 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 25 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 போ் என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
தினமும் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
அலிபிரி பாதயாத்திரை வழித்தடம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை வழித்தடம் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.
தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே பாதயாத்திரை மாா்க்கத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடு தேடிச் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழ்

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் - விசிகவினரிடையே தகராறு

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி

தோல்வி பயமே எடப்பாடி பழனிசாமியின் தரமற்ற பேச்சுக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

