திருப்பதி அலிபிரி மலையடிவாரம் ஸ்ரீகபிலேஸ்வரா் கோயிலில், மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மனித முகமும் மிருக உடலும் கொண்ட புருஷமிருகா வாகனத்தில் சோமாஸ்கந்தமூா்த்தியாக கபிலேஸ்வரா் எழுந்தருளி சேவை சாதித்தாா்.
மகா சிவராத்திரியை ஒட்டி அதிகாலை லிங்கோத்பவா் சேவை முடிந்த பின் உற்சவமூா்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பின்னா் மாலை 5 மணிமுதல் 7 மணிவரை கோயில் வளாகத்தில் ஏற்படுத்தப்பட்ட மண்டபத்தில் சிவபாா்வதி திருக்கல்யாண உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தியது. கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக இதில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தனிமையில் நடத்தப்பட்டது.
திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீகாமாட்சி சமேத கபிலேஸ்வரசுவாமி பல்லக்கில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். வாகன சேவையின் போது சங்கநாதம், வேதபாராயணம் இசைக்கப்பட்டன.
வாகன சேவைகள் தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பிரம்மோற்சவத்தின் நிறைவாக சனிக்கிழமை (மாா்ச் 13) திரிசூல தீா்த்தவாரி நடக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடு தேடிச் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழ்

சிதம்பரத்தில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பினா் - விசிகவினரிடையே தகராறு

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி

தோல்வி பயமே எடப்பாடி பழனிசாமியின் தரமற்ற பேச்சுக்கு காரணம்: மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


