இந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது: வாரப்பலன் (ஜூலை 2 - 8)

ஜூலை 2 முதல் 8-ஆம் தேதி வரை அனைத்து ராசியினருக்குமான வாரப் பலன்கள்
இந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது: வாரப்பாலன் (ஜூலை 2 - 8)
இந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது: வாரப்பாலன் (ஜூலை 2 - 8)

மேஷம்
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

 

குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். செய்தொழிலில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு பயனுள்ளதாகவே அமையும். பொருளாதார நிலை சீராகவே இருக்கும். 

வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பத்தகாத சம்பவங்கள் சக ஊழியர்களினாலேயே ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரிகள் பொறுமையுடன் செயலில் இறங்கி நேரடியாகவே வியாபாரத்தைக் கவனியுங்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் செயல்படுங்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறுவீர்கள். சந்தையில் உங்கள் பொருள்களுக்கு மதிப்பு உயரும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகளும், பொறுப்புகளும் தேடி வந்து சேரும். மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதுப் புது வாய்ப்புகள் வரும். பொருளாதார நிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது. பெண்மணிகள் உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் எதுவும் கிடைக்காது. மனக்குழப்பத்தில் இருப்பீர்கள். மாணவமணிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீஏழுமலையானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 02, 03. சந்திராஷ்டமம்: இல்லை.

ரிஷபம்
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

சுபகாரியங்கள் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் மூலமாகவே சந்தோஷமான சூழ்நிலைகளை எதிர் கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகளின் கடின உழைப்பால் பணிகளில் மேன்மை ஏற்படும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உருவாகும். முக்கியமான விஷயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். கலைத்துறையினர் கடன் தொடர்பான பிரச்னைகளில் இருந்து சற்று விடுபடுவீர்கள். பெண்மணிகளுக்கு வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். சுப காரியங்களை சாமர்த்தியமாக நடத்தி முடிப்பீர்கள். மாணவமணிகள் எதிர்பார்த்த விளையாட்டுகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: ஸ்ரீஹயக்கிரீவரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 02, 04. சந்திராஷ்டமம்: இல்லை.


மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)


மனதில் புது விதமான ஆசைகள் துளிர்க்கும். சுப காரிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களில் மாற்றங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் வருகையால் உற்சாகம் பெருகும்.

உத்தியோகஸ்தர்கள் துணிச்சலுடன் காரியமாற்றி நற்பெயர் வாங்குவீர்கள். அலுவலகச் சூழல் சாதமாகவே இருக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபடவும். உங்கள் முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புச் செலவு கூடுதலாகவே இருக்கும். புதிய உபகரணங்களை வாங்கி விளைச்சலைப் பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கட்சிப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு விடா முயற்சி கை கொடுக்கும். சக கலைஞர்களின் ஒத்துழைப்புடன் ரசிகர்களுக்கும் உதவி செய்வீர்கள். பெண்மணிகள் குழந்தைகளால் ஏற்படும் பிரச்னைகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுவீர்கள். ஆன்மிகத்திலும் நாட்டம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 03, 04. சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் 
(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அனைத்து காரியங்களிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் இல்லத்தேவைகள் சற்று பூர்த்தியாகும். அநாவசியப் பயணங்கள் வேண்டாம். பிறருக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். பொருள் வரவு சுமாராகவே இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு தற்போது நிலவும் சூழ்நிலையில் புதிய மாற்றம் ஏற்படும். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வதற்கான முயற்சிகளை மறுபரிசீலனை செய்யவும். கூட்டுத் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். விவசாயிகளுக்கு உங்கள் விளைபொருள்களுக்கு சந்தையில் மதிப்பு அதிகரிக்கும். போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளித்து லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் எவரையும் நம்பி எந்த ரகசியத்தையும் கூறி வீடாதீர்கள். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். புகழும் பாராட்டும் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும். பெண்மணிகளுக்கு பொருள் வரவு சுமாராக இருந்தாலும் இல்லத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மாணவமணிகள் சோம்பேறித்தனத்தைத் தவிர்க்கவும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்து ஆத்ம பலத்தைப் பெருக்குங்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 04, 05. சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம்
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களுக்கு வருமானம் சீராக இருக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். பிறருக்கு கடன் கொடுப்பதையும், ஜாமீன் கையெழுத்து போடுவதையும் தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் குறையும். வியாபாரிகள் கடன் வாங்கி வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். உங்கள் கூட்டாளிகளில் சிலரைப் பிரிய நேரிடும். விவசாயிகள் மகசூல் அதிகரித்து நல்ல லாபம் காண்பீர்கள். புதிய குத்தகை எடுத்தல் மற்றும் புதிய நிலங்களை வாங்கும் யோகம் உண்டாகும். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையுடன் மோதல், வாக்குவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்கள் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் தோன்றி மறையும். கலைத்துறையினர் சக கலைஞர்களுடன் இணைந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகள் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 03, 06. சந்திராஷ்டமம்: 02.

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தடைகளைக் கடந்து உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் மதிப்பு, மரியாதைக்கு குறைவு வராது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள். வேலைகளைப் பதற்றப்படாமல் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறப் பாடுபடுவீர்கள். கூட்டாளிகளும் ஒத்துழைப்பு நல்குவார்கள். விவசாயிகளுக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய வகை பயிர்களைப் பயிரிட்டு சிறந்த விளைச்சலைக் காண்பீர்கள். 

அரசியல்வாதிகள் சிலருக்கு கட்சியில் புதிய பதவிகள் கிடைக்கும். அனைவரின் பாராட்டுகளையும் பரிசுகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் தாங்கள் செலவு செய்யும் நேரத்தில் கவனம் தேவை. சக கலைஞர்களின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவரின் உடல்நிலையில் சிறிது மாற்றம் ஏற்படும். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் பெற்றோர் சொல் கேட்டு அதன்படி நடக்கவும். உடல்நலத்தைப் பாதுகாக்க உடற்பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொள்ளவும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 அனுகூலமான தினங்கள்: 02, 06. 
சந்திராஷ்டமம்: 03, 04, 05.

துலாம்
(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பூர்வீகச் சொத்து பிரச்னைகளில் நல்ல தீர்வு உண்டாகும். நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். சமூகத்தில் உயர்ந்தவர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களும் ஆதரவு தந்து உதவி புரிவார்கள் அலுவலக வேலைகளைப் பதற்றப்படாமல் செய்து முடிப்பீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாகவே முடியும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கடின உழைப்பால் உடல் நலம் சற்று பாதிக்கப்படும். 

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் ஆதரவைப் பெற முயற்சி செய்வீர்கள். மேலிடம் இட்ட பணியை உடனுக்குடன் செய்து முடிக்கப் பாடுபடுவீர்கள். கலைத்துறையினர் நலிந்த கலைஞர்களுக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரச் சுமை சற்று குறையும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். குழந்தைகளின் வரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்தைக் குறைத்து கொண்டு கல்வியில் அதிக அக்கறை காட்டுங்கள்.

பரிகாரம்: சூரிய பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 03, 08. சந்திராஷ்டமம்: 06, 07.
 

விருச்சிகம்

(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)


புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வருமானம் சற்று உயரும். கோபப்படாமல் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி அநாவசியமாக செலவழிக்காதீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் நன்மை அடைந்தாலும் தகுந்த பாதுகாப்புடன் பயணிப்பது உசிதம். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்த்து கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். கொடுக்கல் வாங்கல் சுமூகமாக இருக்கும். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானம் பல வகையிலும் வந்துசேரும். 

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் ஈடுபட்டு நலிந்தவர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் பெருகும். பணவரவு அதிகரிப்பால் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். பெண்மணிகள் உற்றார் உறவினர்களிடம் சுமூகமாகப் பழகுவீர்கள். மழலை வரவால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சொல்கேட்டு அதன்படி நடக்கவும். வெளி விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 
அனுகூலமான தினங்கள்: 04, 07. சந்திராஷ்டமம்: 08.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சமுதாயத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய பிரயாணங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். தனவரவு அதிகரிக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைக் குறித்த நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு மருந்து மற்றும் மருத்துவப் பொருள்கள் மூலம் சிறிது நன்மை ஏற்படும். விவசாயிகள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியடையும். கால்நடைகளால் லாபம் உண்டாகும். உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்த 
வேண்டிவரும். 

அரசியல்வாதிகள் தாங்கள் எடுக்கும் முயற்சிகள் சிலவற்றில் கால தாமதம் ஆக வாய்ப்புண்டு. கலைத்துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் கொஞ்சம் வருமானம் வரும்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். மாணவமணிகள் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையுடன் செயல்படுவீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள்.

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 05, 07. சந்திராஷ்டமம்: இல்லை.

மகரம்

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகி தெளிவு பிறக்கும். பொருளாதார நிலைமை சீரடையும். எடுத்த காரியங்கள் யாவும் நல்லபடியாக நிறைவேறும். பயணங்களால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மன உற்சாகத்துடனும், துணிவுடனும் காரியங்களை முடித்து நற்பெயர் ஈட்டுவீர்கள். வியாபாரிகள் நண்பர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் நேரடியாகவே அனைத்து காரியங்களிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தடைகள் அனைத்தும் விலகும். விவசாயிகள் நீர்வரத்து சாதகமாக இருப்பதால் உற்பத்தி நன்றாக இருக்கும். வயல் வரப்பு பிரச்னைகளில் பொறுமையைக் கையாளுங்கள். 

அரசியல்வாதிகள் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிர முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் மிகவும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்வீர்கள். சக கலைஞர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண்மணிகள் சிலருக்கு குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும். தாய் தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் பெற்றோரின் அறிவுரையை மதித்து நடக்கவும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 02, 08. சந்திராஷ்டமம்: இல்லை.

கும்பம்

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)


உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். சிந்தனை சக்தி பலப்படும். வருமானம் சுமாராகவே இருக்கும். நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு காரியங்களைச் சாதிப்பீர்கள். சேமிப்புகளைப் பெருக்குவீர்கள். 

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்து கொள்வார்கள். இதுவரை இருந்த பிரச்னைகள் சற்று குறையும். வியாபாரிகள் புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். கொடுக்கல் வாங்கல் மற்றும் பணப்புழக்கம் சீராக இருக்கும். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள். தானிய உற்பத்தி பொருள்களில் நல்ல லாபத்தையும் காண்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு சற்று குறைந்தே காணப்படும். எடுத்த காரியங்களில் சற்று தொய்வு நிலையை சந்திப்பீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு சரளமாக இருக்கும். புதுப் புது ஒப்பந்தங்கள் கைகூடிவரும். பெண்மணிகள் பேசும் நேரத்தில் கவனம் தேவை. உங்களுக்குத் தெரிந்த ரகசியங்களை வெளியில் கொட்டாதீர்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள். நண்பர்களுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் மூலம் அறிவு பலம் கூடும்.

பரிகாரம்: ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 07, 08. சந்திராஷ்டமம்: இல்லை.

மீனம்

(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)


பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த எடுப்பிலேயே எதிலும் வெற்றியை சந்திப்பீர்கள். நல்லோரின் உதவியும் அறிவுரையும் கிடைக்கப்பெறுவீர்கள். எதிர் வரும் இன்னல்களைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.   

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். வியாபாரிகள் கடையை விரிவுபடுத்தும் எண்ணத்தைச் சற்றுத் தள்ளி வைக்கவும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிரமங்கள் குறையும். விவசாயிகள் தோட்டம், தோப்பு உள்ளிட்டவற்றில் விவசாயப் பணிகள் சுமூகமாக முடியும். நீர்ப் பாசன வசதிகளில் கவனம் செலுத்தவும். 

அரசியல்வாதிகள் தொண்டர்களின் குறைகளைத் தீர்க்க முயற்சி செய்யவும். புதிய பதவிகள் தேடி வரும். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவ
மணிகளுக்கு மேற்படிப்புக்கான முயற்சிகளில் பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும். அனு

கூலமான தினங்கள்: 06, 08. சந்திராஷ்டமம்: இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com