திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் படிக்கட்டுகள்.. சுவாமிமலை கோயிலில் படிபூஜை!!

சுவாமிமலை கோயிலில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களில் அமையப்பெற்ற படிக்கட்டுகளுக்கு படிபூஜை கோலாகலம்

News image

சுவாமிநாதசுவாமி கோயிலில் நடந்த படி பூஜை - கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2025, 12:25 pm IST

கும்பகோணம்: தமிழ் ஆண்டுப் பிறப்பையொட்டி சுவாமி மலையில் அமைந்துள்ள 60 தமிழ் வருட படிகட்டுகளுக்கு படி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும்.

இங்கு அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பட்ட மலைக்கோயிலாகும். இத்தலத்தினை தரிசனம் செய்ய வருகை தரும் முருக பக்தர்களுக்கு 60 தமிழ் வருட தேவதைகளும் 60 படிகட்டுகளாக இருந்து சேவை செய்வதாக ஐதீகம்.

மேலும் இத்தலத்தில் தான் முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திர பொருளை, குருவாக இருந்து உபதேசம் செய்தார் என்பதும் வரலாறு. எனவே இத்தலத்தில் முருகப்பெருமான் சுவாமிநாதசுவாமியே நீ என்றும் போற்றப்படுகிறார்.

இத்தகைய பெருமைக்குரிய தலத்தில் ஒவ்வொரு தமிழ் வருட பிறப்பின் போதும் பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோத்பத்தி என தொடங்கி குரோதன, அட்சய என முடிவுறும் 60 தமிழ் வருட படிக்கட்டுகளுக்கும் விசேஷ திருப்படிப்பூஜை செய்வது வழக்கம், அதுபோல இன்று 60 தமிழ் வருட வரிசையில் 37வது தமிழ் வருடமான விசுவாவசு வருடப்பிறப்பை முன்னிட்டு ஒவ்வொரு படிக்கட்டிலும் மஞ்சள், கும்குமம் இட்டு ஐந்து முக திருவிளக்கு ஏற்றி வெற்றிலை, தேங்காய், பூ, பழம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சமுக கற்பூரதீபம் காட்டி மகா தீபாராதனை செய்யப்பட்டது.

இன்று விசுவாவசு தமிழ் வருடப்பிறப்பையொட்டி மூலவர் சுவாமிநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பெற்று, சண்முகா அர்ச்சனையும் நடைபெற்றது. தங்ககவசம், வைரவேலுடன் இராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.