சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது அளிக்க முதலில் கோரியது தில்லித் தமிழ்ச் சங்கம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது தில்லித் தமிழ்ச் சங்கம்'' என்று

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 3:51 am IST

""தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.க்கு "பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என முதலில் கோரிக்கை வைத்தது தில்லித் தமிழ்ச் சங்கம்'' என்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் எம்.என். கிருஷ்ணமணி கூறினார்.

தமிழ்த்தாய் விருது தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு மட்டும் வழங்கப்பட்ட விருதல்ல. தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 67 ஆண்டுகால வரலாற்றுக்கும், தில்லிவாழ் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட்ட விருது.

1947-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை உள்ள தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளின் உழைப்புக்கும் நற்பணிக்கும் கிடைத்த விருது. 1987-ம் ஆண்டு தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த ராமாமிர்தம் ""எம்.ஜி.ஆர்.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்'' என்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் குரல் கொடுத்தார். அதன் பின்னர்தான் அரசியல்வாதிகள் இந்த கோரிக்கை வைத்து விருது வழங்கப்பட்டது. தமிழ் சங்கங்களை எப்படி ஒன்றிணைக்க முற்பட்டீர்கள் என்று என்னிடம் சிலர் கேட்டார்கள். தில்லியில் வாழும் தமிழர்கள் ஒரே மனதுடன்தான் உள்ளனர். அதில் பிரிவு ஏதும் கிடையாது என்றேன். 

தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது வழங்கியதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.