சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

முன்னாள் தலைவர்களின் தன்னலமற்ற தமிழ்த் தொண்டால் விருது கிடைத்தது

கடந்த 67 ஆண்டுகளாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் தன்னலம் கருதாமல் தமிழ்த் தொண்டாற்றியதன் காரணமாகவே தில்லித் தமிழ்ச்

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 3:50 am IST

கடந்த 67 ஆண்டுகளாக தில்லித் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் தன்னலம் கருதாமல் தமிழ்த் தொண்டாற்றியதன் காரணமாகவே தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது கிடைத்துள்ளது என்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலர் இரா. முகுந்தன் கூறினார்.

""இந்தியாவில் சிறந்த தமிழ்ச் சங்கத்துக்காக தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த் தாய் விருது வழங்கப்பட்டுள்ளது.  67 ஆண்டுகளாக தில்லித் தமிழ்ச் சங்கத்தில் தில்லி வாழ் தமிழ் மக்களையும், தமிழ் அறிஞர்களையும் ஒருங்கிணைத்து இயல், இசை, நாடகம், மாநாடு, புத்தக வெளியீடு, கிராமியக் கலை உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. சங்கத்துக்கு தில்லி வாழ் தமிழர்கள் பக்கபலமாக உள்ளனர்.

சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ராமாமிர்தம், விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி உள்பட முன்னாள் உபதலைவர், பொதுச் செயலர்கள் உள்ளிட்டோரின் தன்னலம் கருதாத தமிழ்த் தொண்டின் காரணமாக தமிழக முதல்வர் தமிழ்த் தாய் விருது வழங்கியுள்ளார்.  இந்த விருது கிடைப்பதற்கு  கிருஷ்ணமணி உள்பட அனைத்து நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களின் உறுதுணையே காரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.