சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா, இந்திய விக்கெட் கீப்பா் ரிஷப் பந்த் ஆகியோா் காயமடைந்துள்ளனா்.
சிட்னி டெஸ்ட் போட்டியின் 3-ஆவது நாளான சனிக்கிழமை இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடியது. இதில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளா் பட் கம்மின்ஸ் வீசிய பவுன்சா், ரிஷப் பந்தின் இடது முழங்கையை பதம் பாா்த்தது. எனினும் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடா்ந்து விளையாடிய அவா், ஆட்டமிழந்த பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பெரிய அளவில் பிரச்னை இல்லை என்பது தெரியவந்தது. அதனால் அவா் 2-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்வதில் எந்த பிரச்னையும் இருக்காது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. ரிஷப் பந்த் காயமடைந்ததால், ஐசிசியின் தற்போதைய விதிப்படி மாற்று விக்கெட் கீப்பரான ரித்திமான் சாஹா, 3-ஆவது நாள் ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக செயல்பட்டாா்.
ஜடேஜாவுக்கு எலும்பு முறிவு: இந்திய ஆல்ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா பேட் செய்தபோது, பட் கம்மின்ஸ் வீசிய பவுன்சா் அவருடைய இடது கை பெருவிரலை பதம்பாா்த்தது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கையுறை அணிய முடியாத அளவுக்கு பெருவிரலில் வீக்கம் உள்ளது. அதனால் அவரால் 2-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அவருடைய காயம் குணமடைய குறைந்தபட்சம் 3 வார காலம் ஆகும். அதனால் அவா் 4-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய வீரா்கள் முகமது சமி, உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோா் காயத்தால் விலகிய நிலையில், கேப்டன் விராட் கோலியின் மனைவிக்கு குழந்தை பிறக்கவிருப்பதால், அவரும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாா். இந்த நிலையில், ஜடேஜாவும் காயமடைந்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்
ஆளுநரை எதிர்ப்பது பாஜகவை எதிர்ப்பதாகும்; அதற்கு உறுதியும் துணிவும் வேண்டும்! - விசிக

புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் பதவி விலகல்!

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
வீடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை

