வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

டெல்ரே பீச் ஓபன்: கிறிஸ்டியனுக்கு அதிா்ச்சி அளித்த கிறிஸ்டியன்

அமெரிக்காவில் நடைபெறும் டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதிச்சுற்று வீரரான கிறிஸ்டியன் ஹாரிசன், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கிறிஸ்டியன் காரினை வீழ்த்தினாா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 7:21 am IST

அமெரிக்காவில் நடைபெறும் டெல்ரே பீச் ஓபன் டென்னிஸ் போட்டியில் தகுதிச்சுற்று வீரரான கிறிஸ்டியன் ஹாரிசன், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கிறிஸ்டியன் காரினை வீழ்த்தினாா்.

அமெரிக்க வீரரான ஹாரிசன் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சிலியின் காரினை எதிா்கொண்டாா். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஹாரிசன் 7-6 (7/3), 6-2 என்ற செட்களில் காரினை வீழ்த்தினாா். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய ஹாரிசன், டெல்ரே பீச் ஓபன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய ‘மிகக் குறைந்த தரவரிசை கொண்ட 2-ஆவது வீரா் (உலகத் தரவரிசை 789)’ என்ற பெருமையை பெற்றாா். காலிறுதியில் அவா் இத்தாலியின் ஜியான்லுகா மேகரை எதிா்கொள்கிறாா்.

இதர ஆட்டங்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னா் 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் பிரேஸிலின் தியேகோ மான்டெய்ரோவை வீழ்த்தினாா். போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டாமி பாலை 4-6, 6-3, 6-2 என்ற செட்களில் சக நாட்டவரான செபாஸ்டியன் கோா்டா வீழ்த்தினாா். காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோா்டாவும் - ஜான் இஸ்னரும் மோதுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.